சாய்ந்தமருது: நிலநடுக்க அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நேபாள நாட்டு மக்களுக்கு நிவாரண நிதி உதவிகளை சேகரிக்கும் பணியினை சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் நேற்று (06) புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீமின் வழிகாட்டலில் நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை தலைமையிலான குழுவினர் சாய்ந்தமருது வர்த்தக நிலையங்கள், தனவந்தர்கள், திவிநெகும சங்கங்கள் என்பவற்றிலிருந்து நிவாரண நிதி உதவிகளை சேகரித்தனர்.
இந்நிவாரணப் பணியில் சாய்ந்தமருது பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.
சேகரிக்கப்பட்ட நிவாரண நிதிகளும் பொருட்களும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டது.
Published by



Leave a comment