![asad_sali_[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/asad_sali_1.jpg?w=100&h=150)
கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பானது வரலாற்றில் மிக சிறந்த கேலி என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதிகள் ஓய்வுபெற்ற பின்னர் எந்த பிரச்சினையுமின்றி வாழ்ந்தனர் என்பதை அனைவரும் அறிவர். தோல்வியடைந்த ஜனாதிபதி தனது பதவிக்காலத்தில் கொள்ளையிட்ட பணத்தை செலவிட்டு விகாரைகளுக்கு சென்று வழிப்பாடுகளில் ஈடுபட்டு மீண்டும் அதிகாரத்திற்கு வர முயற்சித்து வருகிறார்.
முன்னாள் ஜனாதிபதியுடன் அவரது அரசாங்கத்தில் இருந்த கொள்ளையர்களும் ஒன்றுக்கூடி வருகின்றனர். திருடர்களை பாதுகாப்பதற்காக பௌத்த மத தலைவர்கள் தலையிடுவது கவலைக்குரிய விடயம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்புக்கு பௌத்த பிக்குமாறும் தொடர்புபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment