-
முகமது நபி கேலிச் சித்திரங்கள் நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பு
அம்ஸ்டர்டம்: இறைதூதர் முகமதுவைக் காட்டும் கேலிச் சித்திரங்களை நெதர்லாந்து தொலைக்காட்சிகளில் சனிக்கிழமையன்று ஒளிபரப்பப்போவதாக டென்மார்க்கின் தீவிர வலதுசாரி அரசியல்வாதி கியர்த் வில்டர்ஸ் கூறுகிறார்.அரசியல் கட்சிகளுக்கென ஒதுக்கப்படும் ஒரு ஒளிபரப்பு நேரத்தில், தான் இதனைச் செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
‘உயிரினங்கள் பெரிய அளவில் அழியும் ஒரு காலகட்டம் பூமியில் உருவாகி வருகிறது’
லண்டன்: உயிரினங்கள் பெரிய அளவில் அழியும் ஒரு காலகட்டம் பூமியில் உருவாகி வருகிறது என்றும், இந்த காலகட்டத்தில் மனித இனமும் அழியும் வாய்ப்பு உள்ளது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.விலங்கினங்கள் அதிர்ச்சியளிக்கும் அதிக வேகத்தில் அழிந்துவருவதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
-
“எனது தந்தையின் இறப்பு சான்றிதழை ஒப்படையுங்கள்” ஒசாமாவின் மகன் அமெரிக்காவிடம் விண்ணப்பம்
– SHM ரியாத்: அமெரிக்க ராணுவத்தால் கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் இறப்பு சான்றிதழை அமெரிக்காவிடம் அவரது மகன் கேட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
-
வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்மும் சர்வதேச மயப்படுத்தலின் அவசியமும்
– ஏ.எச்.எம்.பூமுதீன் மன்னார்: விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களின் இருள் சூழ்ந்த யுகம் இன்று 25வது ஆண்டு எனும் வெள்ளி விழாவை தொட்டு நிற்கின்றது. 1990ம் ஆண்டு ஐ.தே.க.வின் அரசாங்க காலத்தில் வெளியேற்றப்பட்ட இந்த வடமாகாண முஸ்லிம் மக்கள் இற்றை வரையான ஐ.தே.க.வின் மூன்றாவது தடவை ஆட்சிக் காலத்திலும் கூட அதே இருள் சூழ்ந்த துயரத்திற்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர்.
-
மும்பை மழையில் சிக்கி அந்தரத்தில் தொங்கும் பெண்
– AF-90 மும்பை: மும்பையில் நேற்று பெய்த கனமழையால் நகரமே ஸ்தம்பித்து போனது. இந்த மழையில் சிக்கிய பெண்மணி ஒருவரின் படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடல் அலைகள் கொந்தளித்தன.
-
மஹிந்தவிற்கு உலங்கு வானூர்தி
கொழும்பு: பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு உலங்கு வானூர்தி ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு அதி கூடிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
ரமழான் பேரீத்தம்பழ விநியோகத்தில் இழைக்கப்பட்ட அநீதி!!
குறிப்பு: ஏறாவூர், மக்காமடி ஹைராத் பள்ளிவாயல் என்பதை வாசகர்கள் கவனத்திற்கொள்க.
-
ஸஹர் உணவு உண்பதின் சிறப்பு
1) ஸஹர் செய்யாமலும், நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே? என ஸஹாபாக்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றவரல்ல, எனக்குக் குடிக்கவும், உணவும் கொடுக்கப்படுகின்றது
-
உள்ளுராட்சி சபை: 4819 வட்டாரங்கள், 5081 உறுப்பினர்கள்
கொழும்பு: உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை பொதுநிர்வாக அமைச்சர் கரு ஜயசூரியவிடம் நேற்று கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு அமைய நாடு முழுவதிலும் உள்ளூராட்சி சபைகளுக்கு 4819 வட்டாரங்கள் பிரிக்கப்பட்டிருப்பதுடன், 5081 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
-
அசாத் சாலியுடனான நேர்கானல் (வீடியோ)
– அகமட் இர்ஷாட்
-
தனியார் மற்றும் இ.போ.ச பஸ் கட்டணம் அதிகரிக்காது
கொழும்பு: தனியார் மற்றும் இ.போ.ச பஸ் கட்டண ங்கள் ஜுலை முதல் உயர்த்தப்படமாட் டாது என உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று அறிவித்தார். பஸ் போக்குவரத்து செலவு இந்த வருடத்தில் அதிகரிக்காத நிலையில் பஸ் கட்டண சூத்திரத்தின்படி பஸ் கட்டணத்தில் மாற்றம் இடம்பெறாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
-
வடமாகாணத்தில் அதிகரிக்கும் மதுப்பழக்கம்: மைத்திரிபால சிறிசேன கவலை
கொழும்பு: இலங்கையில் வடமாகாணத்திலேயே அதிக அளவில் மது அருந்தப்படுவதாகவும் இதனால், மதுபான விற்பனையின் மூலம் அங்கிருந்து அதிக அளவிலான வரிப்பணம் அரசாங்கத்திற்கு செலுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.