கொழும்பு: தனியார் மற்றும் இ.போ.ச பஸ் கட்டண ங்கள் ஜுலை முதல் உயர்த்தப்படமாட் டாது என உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று அறிவித்தார். பஸ் போக்குவரத்து செலவு இந்த வருடத்தில் அதிகரிக்காத நிலையில் பஸ் கட்டண சூத்திரத்தின்படி பஸ் கட்டணத்தில் மாற்றம் இடம்பெறாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜுலை மாதம் முதல் பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு பஸ் உரிமையாளர் சங்கங்கள் அரசாங்கத்தை கோரியிருந்தன. ஆனால் பஸ் சங்கங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து பஸ் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க இணக்கம் காணப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். பஸ் கட்டண மறுசீரமைப்பு குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த அவர்,
வருடாந்த பஸ் கட்டண மறுசீரமைப்பு படி இவ்வருடமும் ஜுலை முதல் பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு பஸ் சங்கங்கள் கொரியிருந்தனர். கடந்த ஜனவரியில் பஸ் கட்டணம் குறைக்கப்பட்ட போது எரிபொருள் விலை உதிரிப்பாக விலை, ஊழியர் சம்பளம், வட்டி வீதம் என 12 அம்சங்கள் அடங்கலாக போக்குவரத்து செலவு கிலோ மீட்டருக்கு 89.99 ரூபா எனவும் மதிப்பிடப்பட்டது.
தற்பொழுது போக்குவரத்து செலவு 89.97 ரூபா ஆக 0.02 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. ஜனவரியில் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது முதல் எரிபொருள் விலையோ, டயர் விலையோ, லீசிங் விலையோ அதிகரிக்கவில்லை, நிர்வகிப்பு செலவு, சேவை கட்டணம், சம்பளம் சிறிது உயர்வடைந்துள்ளது.
இதன் பிரகாரம் கடந்த 17 ஆம் திகதி பஸ் சங்கங்களுடன் பேச்சு நடத்தினோம். 2015 வருடாந்த கட்டண மறுசீரமைப்பின்படி பஸ் கட்டணத்தில் மாற்றம் செய்யப் படமாட்டாது என்றார்.
Published by

Leave a comment