மும்பை: மும்பையில் நேற்று பெய்த கனமழையால் நகரமே ஸ்தம்பித்து போனது. இந்த மழையில் சிக்கிய பெண்மணி ஒருவரின் படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடல் அலைகள் கொந்தளித்தன.
இந்நிலையில், சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் இருந்து தப்பிப்பதற்காக பஸ் ஒன்றில் பெண் கஷ்டப்பட்டு ஏறி தொங்கிக்கொண்டிருக்கும் இப்புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. இந்த ஒரு புகைப்படம், மும்பையின் நிலையை உணர்த்த போதுமானதாக இருக்கிறது.
Published by


Leave a comment