தமிழ் 193 புள்ளிகள்: மட்டு வின்சென்ட் மாணவி முதலிடம்

Grade5கொழும்பு: தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகின. இதன்படி தமிழ் மொழி மூலம் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவியான பத்மநாதன் தக்ஷினியா 193 புள்ளிகளை பெற்று முதலிடத்திலுள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக யாழ். சென் ஜோன் பொஸ்கோ மாணவனான சோதிநாதன் வசீகரன் 192 புள்ளிகளை யும், புத்தளம் மணல் குன்று முஸ்லிம் வித்தியாலய மாணவனான எம்.என்.ஏ. அஷ்ஹர் – 191 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். பரீட்சை திணைக்களம் நாடளாவிய ரீதியில் முதல் மூன்றிடத்தையும் பெற்ற 11 மாணவர்களை தரப்படுத்தியுள்ளது.

மேற்படி முதல் மூன்று இடங்களையும் சிங்கள மொழி மூல மாணவர்களே பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் அதிகூடிய 196 புள்ளிகளை மூன்று மாணவிகளும், 195 புள்ளிகளை 05 மாணவர்களும், 194 புள்ளிகளை 03 மாணவர்களும் பெற்றுக்கொண்டுள் ளனர்.

நேற்றைய தினம் அனைத்துப் பாடசாலைகளுக்கும் பரீட்சைப் பெறு பேறுகள் உத்தியோகபூர்வமாக கிடைக் கப்பெறாமையினால் பல பாடசாலை களின் அதிபர்கள் தங்களது மாணவர் களின் புள்ளி விபரங்களை வழங்கு வதற்கு மறுத்துவிட்டனர்.

எனினும் பெற்றோர் இணையத்தளங் களூடாக பெற்றுக்கொண்ட பெறுபேறு களுக்கமையவே எமது நிருபர்களுக்கூடாக மேற்படி புள்ளிகள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட் டம் கல்குடாவைச் சேர்ந்த பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலயத்தின் மாணவியான ஜெகதீசன் சர்ஜீதன் 190 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கார்மேல் பற்றிமா தேசியக் கல்லூரியைச் சேர்ந்த கிருஸ்ண சைதன்யன் மற்றும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல் லூரியைச் சேர்ந்த முகம்மட் ஜவாஹிர் அகமட் முஷார்ரப் ஆகிய இருவரும் 189 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

யாழ். சென் ஜோன் பொஸ்கோவைச் சேர்ந்த கனகராஜ் கவிலக்ஷ்ன் 188 புள் ளிகளையும் சிறிஸ்கந்தராஜா கஜலக்ஷ்ன் 186 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு இ.கி.சங்க பெண்கள் வித்தியாலய மாணவியான ரமேஸ்குமார் கஜினி, ஹற்றன் ஹைலன்ட்ஸ் கல்லூரி விஜ யரட்ணம் ரிஷிகேஸ் மற்றும் நல்லதண்ணி பாடசாலையைச் சேர்ந்த கனகரத்தினம் சரண் ஆகியோர் 185 புள்ளிகளைப் பெற் றுள்ளனர். காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுரேஷ் லியோன் என்னும் மாணவன் 179 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்திலேயே முதலாவதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாவிதன்வெளி அல்தாஜுன் வித்தி யாலயத்தைச் சேர்ந்த அப்துல் வாகிட் பாத்திமா ஹிக்மா என்னும் மாணவி 169 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

கல்முனை கல்வி வலய பாண்டிருப்பு அல்-மினன் வித்தியாலயத்தின் அதிகூடிய 167 புள்ளியினை ஆர். அத்தீப் அஹமட் என்னும் மாணவன் பெற்றுள்ளார்.

Published by

Leave a comment