2020ல் கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கை

suvaminathanகொழும்பு: 2020ல் கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கை திகழ்வதற்கு அமெரிக்காவின் பூரண ஒத்துழைப்பை பெற்றுத் தருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஸாப் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனை அமைச்சுக் காரியாலயத்தில் நேற்று(08) சந்தித்த போதே இக்கருத்தினை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிக்காக அமெரிக்கா தனது ஆதரவை தொடர்ந்தும் பெற்றுத் தந்துள்ளதாகவும் 1993 ஆண்டிலிருந்து இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிக்காக அமெரிக்கா இதுவரை 40 மில்லியன் டொலர்வரை பெற்றுக் கொடுத்துள்ளதாக கூறினார். தற்போது இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியை துரிதப்படுத்துவதற்காக மேலும் 1.75 மில்லியன் அமெரிக்க டொலர் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

suvaminathan

இலங்கையின் பொருளாதாரம், மீள்குடியேற்றம் மற்றும் இடம்பெயர்தோரகளின் நலன்புரிகளுக்கு அமெரிக்கா மிகவும் நெருக்கமாக தமது கடமையை தொடர்ந்து செய்து கொண்டு போவதற்கு முன்வந்துள்ளதை அதுல் கெஸாப் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிகழ்வின் போது அமைச்சின் மேலதிகச் செயலாளர் எம்.எம்.நயீமுதீனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

  • ஏ.எல்.எம். தாஹிர்
    ஊடகப் பிரிவு
    புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு

Published by

Leave a comment