காத்தான்குடி: நேற்றைய தினம் வெளியாகிய கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ கற்கைக்கான இறுதி பரீட்சையின் முடிவுகளின் படி எமது காத்தன்குடியை சேர்ந்த ஏழு மாணவர்களும் தமது இறுதி பரீட்சையில் பூரண சித்தி அடைந்துள்ளதுடன் , தமது மருத்துவ கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்…
பல சவால்களுக்கும், தடைகளுக்கும் அப்பால்,தன்னம்பிக்கையுடன்,அயராத முயற்சியுடன் தனது கற்கையை பூர்த்தி செய்துள்ள இம்மாணவர்களுக்கு எமது ஊர் சார்பாகவும், “SL Youth Muslim Organization” சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு,
இவர்களின் வெற்றிக்காக பல விதங்களிலும் உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள், சமூக தொண்டர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவர்களின் சேவைகள் இஹ்லாஸ் உள்ளதாகவும்,உலக ,மறுமை வாழ்வின் நலனுக்காக இருக்கவும், இவர்களின் மூலமாக சமூகம் முழுமையான பல பிரயோசனங்களை அடையவும் அல்லாஹ் அருள் புரிய துஆ செய்கின்றோம்.
-Dr Sibly Hayath
-Dr Imran ibnu Meera Muhaideen
-Dr Amjath Ameer Ali
-Dr Husni Ahamed
-Dr Azwer
-Dr Mazahima Faheem
-Dr Benazir Jamil
Leave a comment