Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சவுதி: பணிப்பெண்ணுக்கு தண்டனை திகதி குறித்த வதந்திகளுக்கு மறுப்பு

    றியாத்: இலங்கை பணிப் பெண் ஒருவரை கல்லெறிந்துக் கொலை செய்யும்படி, சவுதி நீதிமன்றம் ஒன்று வழங்கியுள்ள தீர்ப்பு இன்று (வெள்ளி) நிறைவேற்றப்படவுள்ளதாக பரவி வரும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அஸ்மி தாசிம் தெரிவித்துள்ளார். இப் பெண்ணை விடுவிக்க உயர்மட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், இவ்வாறான பொய் பிரச்சாரங்கள் நடப்பது கவலையளிப்பதாகவும் அவர் கூறினார்.

  • அரச ஊழியர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒரு வாகனம்!!

    கொழும்பு: அரச ஊழியர்களுக்கு, 10 வருடங்களுக்கு ஒரு முறை வரிச் சலுகையுடன் கூடிய வாகன கொள்வனவுக்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (03) தெரிவித்தார்.

  • நாங்கள் குண்டு வைக்கும் குண்டரல்ல தொண்டு செய்யும் தொண்டர்

    நாங்கள் குண்டு வைக்கும் குண்டரல்ல தொண்டு செய்யும் தொண்டர். உண்டு வாழ உணவில்லா அண்டை நாட்டின் சென்னையில்

  • காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2016 புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை

    பழுலுல்லாஹ் பர்ஹான் காலி: காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2016ம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டின் சரீஆ (மௌலவி,ஆலிம்),அல்குர்ஆன் மனனம் ஆகிய இருபகுதிகளின் முதலாம் ஆண்டிற்கு புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 13-12-2015 ஞாயிற்றுக்கிழமை காலை 09.மணிக்கு இல.50,ஹிரிம்புர குறுக்கு வீதி-காலி எனும் முகவரியில் அமைந்துள்ள இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார்.

  • வேலை முடிந்து திரும்பிய யுவதி பாலியல் துஷ்பிரயோகத்தின் பின் கொலை!

    மஹியங்கணை: ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று திரும்பிய 18 வயது யுவதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.மஹியங்கணையிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் வேவத்தை, கந்தல்கும்புரவைச் சேர்ந்த ரம்யா விதர்ஷிணி எனும் 18 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

  • “மஹிந்த ராஜபக்ஷ விடுதலை புலிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளவேண்டி ஏற்படலாம்”

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலை புலிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளவேண்டி ஏற்படலாம் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

  • இங்கிலாந்து: அஸ்லமும் பேரீத்தம்பழ இழுபறியும்

    ரெடிங்: இங்கிலாந்தின் ரெடிங் (Reading) நகர் வாழ் இலங்கை முஸ்லிம்களுக்கான அமைப்பு (ASLAM) “அஸ்லம்” என அழைக்கப்படும் இவ் அமைப்பில், எமது ஊர் நபர்கள் சிலர் உட்பட இலங்கையின் பிற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் அங்கத்தவர்களாக இருக்கின்றனர்.

  • மழை: சென்னை விமான நிலையம் மூடப்பட்டது

    சென்னை: சென்னையில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதப்படுத்தப்பட்டுள்ளன என்று விமான நிலைய இயக்குநர் தீபக் மிஷ்ரா தெரிவித்தார்.

  • முக்காடு போடவேண்டிய காத்தான்குடியின் தௌஹீத் அமைப்புக்கள்

    இர்ஷாட் ஏ. காதர் காத்தான்குடி: 2000ம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து காத்தான்குடியில் தௌஹீத் வளர்ச்சி ஏற்பட்டு வந்தது. அதன் பின்னணியில் இன்று தௌஹீத் எழுச்சிகள் தனிநபர்களிடத்தில் வளர்ந்த வளர்ச்சியைப் பார்க்கிலும், அமைப்புக்களிடத்தில் அக்கறையற்றுக் காணப்படுகின்றன.

  • கடும் போக்கு அமைப்புக்களை நல்லாட்சி அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

    பொதுபலசேனா மற்றும் ராவனா பலய ஆகியவற்றின் அண்மைக்கால செயற்பாடுகள் தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கட்டுப்படுத்த முடியாத இவர்களின் செயற்பாடுகளை இந்த நல்லாட்சி அரசினால் கூட கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாதுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

  • பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினால் கல்முனை வீதி அபிவிருத்திற்கு 3 கோடி 90 லட்சம் ரூபா ஒதுக்கீடு!

    ஹாசிப் யாஸீன் கல்முனை: விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் நெடுஞ்சாலைகள் அமைச்சின் 3 கோடி 90 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கல்முனைக்குடி காசீம் வீதி காபட் வீதியாகவும், தைக்கா வீதி வடிகான் வசதிகளுடன் கொங்றீட் வீதியாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

  • சா/த உதவி பரீட்சைகள், கருத்தரங்குகளுக்கு தடை

    கொழும்பு: டிசம்பர் 02 ஆம் திகதி முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரை க.பொ.த. சாதாரண தர பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், மாதிரி பரீட்சைகள், உதவி வகுப்புகள் போன்றவற்றை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 08 ஆம் திகதி, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகவுள்ளதனால், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் குறிப்பிட்ட தடை அமுல்படுத்தப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

←Previous Page
1 … 277 278 279 280 281 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar