இங்கிலாந்து: அஸ்லமும் பேரீத்தம்பழ இழுபறியும்


reading2ரெடிங்: இங்கிலாந்தின் ரெடிங் (Reading) நகர் வாழ் இலங்கை முஸ்லிம்களுக்கான அமைப்பு (ASLAM) “அஸ்லம்” என அழைக்கப்படும் இவ் அமைப்பில், எமது ஊர் நபர்கள் சிலர் உட்பட இலங்கையின் பிற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் அங்கத்தவர்களாக இருக்கின்றனர்.

இவ்வமைப்பிற்குள் ஊர் வாதம், பிரதேச வாதங்கள் மறைமுகமாக இருந்த போதிலும், ஜூம்ஆ ஏற்பாடுகள், பெருநாள் காலங்களில் ஒன்று சேர்தல் (get together), வருடாந்த ஒன்று கூடலும் விளையாட்டு நிகழ்வுகளும், நோன்பு காலத்தில் இரவுத் தொழுகை ஏற்பாடுகளும், மற்றும் பெருநாள் தொழுகைகளும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காக இவ்வமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது.

“மௌலவி” ஒருவர், இவ்வமைப்பின் உறுப்பினர் சிலருடன் கலந்தாலோசித்ததன் பின்னர், ஆயிரம் கிலோ கிராம் நிறையுடைய பேரீத்தம் பழங்களை குறித்த நிறுவனத்துக்கு சவூதியிலிருந்து அன்பளிப்பாக அனுப்பி வைத்துள்ளார்.

இப்பேரீத்தம்பழங்களை சுங்கக்கிளையூடாக (UK) பெற்றுக்கொள்வதற்கு 400 ஸ்டேர்லிங் பவுண்கள் (என்பதாயிரம் ரூபாய்) ஆரம்பத்தில் கோரப்பட்டிருந்தன. இவ்வளவு தொகையான பேரீத்தம் பழங்கள் எமக்கு எதற்கு எனவும், இப்பாரிய அளவிலாள பேரீத்தம்பழங்களைப் பெற்றுக்கொள்வதற்கு,  அஸ்லம் அமைப்பில் பதிவு செய்தவர்கள் மிகக்கு குறுகிய எண்ணிக்கையினராகவே இருக்கின்ற காரணங்களால் மென் மேலும் பல மாதங்கள் இழுபறியாகின.

reading1
ரெடிங், ஒக்ஸ்ஃபோர்ட் வீதியில் கம்பீரமாகக் காட்சிதரும் அபூபக்ர் பள்ளிவாயலாகும். பாகிஸ்தான் நாட்டினரின் அதிகூடிய பங்களிப்புடன் கட்டப்பட்ட இப்பள்ளிவாயல், கடந்த 2013 இல் திறக்கப்பட்டு மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது.

குறித்த காலத்துக்குள் இப்பேரீத்தம்பழங்களை பெற்றுக்கொள்ளுமாறு சுங்கக் கிளை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தும், இழுபறியின் காரணமாக மேலதிக அபராதப் பணத்துடன் சேர்த்து 5000 ஸ்டேர்லிங் பவுண்ஸ் (பத்து இலட்சம்) வரைக்கும் தற்பொழுது இப்பேரீத்தம்பழங்களை பெற்றுக்கொள்வதானால் செலுத்தப்பட வேண்டிய பெறுமதியாக இருக்கின்றது.

இதுவரைக்கும் இவ்வமைப்பின் உறுப்பினர்கள் இவ்விடயத்தில் அக்கறையற்றிருப்பதால், மீண்டும் இப்பேரீத்தம் பழங்கள், அனுப்பி வைத்த அரபு நாட்டை நோக்கிச் செல்லும் பரிதாபமும் தற்பொழுது ஏற்பட்டிருக்கிறது.

இவ்வமைப்பிலும், இந்நகரிலும் இருக்கும் இலங்கை குடும்பத்தினர் எவரும் ஈத்தம்பழத் தேவையுடையவர்களல்லர்.

இவர்கள்தான் வறிய மக்களுக்கு “ஸதகா” செய்ய வேண்டுமே தவிர, இவர்களுக்கு ஈத்தம்பழம் ஸதக்காவாகப் போய்ச்சேர வேண்டிய தேவை அங்கு இல்லை.

அனுப்பிய குறித்த மௌலவி, நல்ல நோக்கத்திலேயே அன்பளிப்பாக அவர் அனுப்பி வைத்துள்ளார். இப்படி இவர்கள் இழுத்தடிப்பார்கள் என்றும் பொடுபோக்காக இருப்பார்கள் என்றும் அவரும் நினைத்திருக்க மாட்டார்.

இவ்வமைப்பிலுள்ளவர்கள் உண்டு மகிழ்வதிலும், ஏனைய விடயத்திலும் அஸ்லம் நிகழ்வில் தவறாமல் பங்குகொள்கின்றனர்.  ஆளுக்கு இருபது ஸ்டேர்லிங் பவுண்ஸ் வழங்கி இருந்தால், 400 ஸ்டேர்லிங் பவுண்ஸ்களை சுங்கக் கிளைக்கு வழங்கி ஆரம்பத்திலலேயே இப்பேரீத்தம்பழங்களை வெளியிலெடுத்திருக்கலாம்.

இப்பேரீத்தம்பழங்களைப் பெற்றிருந்தால் குறைந்தது ஒரு குடும்பத்திற்கு 15 கிலோ நிறையுடைய பேரீத்தம் பழங்கள் கொடுக்கக் கூடியதாக இருக்கும் எனவும்  சிலர் தெரிவிக்கின்றனர்.

சுமார் 20 வருட இலங்கை பரம்பறையினரைக் கொண்ட ரெடிங் நகரில், இலங்கை முஸ்லிம்களுக்கான மார்க்க, சமூக நிகழ்வுகளுக்குத் தனியான ஓர் சொந்தக் கட்டடம் இதுரையிலும் அமையப்பெறவில்லை. ஏனைய நாட்டவர்கள் பள்ளிவாயல்கள் அமைத்து சிறப்பாக தங்களது “கொம்யூனிட்டி”யை நடாத்திவரும் இந்நிலையில், இலங்கை முஸ்லிம்களின் சமூக உணர்வுகளும், பொறுப்புக்களும் மந்த கதியிலேயே ரெடிங் நகரில் காணப்படுவதாக பலர் கவலை தெரிவிக்கின்றனர்.

Published by

Leave a comment