- இர்ஷாட் ஏ. காதர்
காத்தான்குடி: 2000ம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து காத்தான்குடியில் தௌஹீத் வளர்ச்சி ஏற்பட்டு வந்தது. அதன் பின்னணியில் இன்று தௌஹீத் எழுச்சிகள் தனிநபர்களிடத்தில் வளர்ந்த வளர்ச்சியைப் பார்க்கிலும், அமைப்புக்களிடத்தில் அக்கறையற்றுக் காணப்படுகின்றன.
இவற்றுக்கான அடிப்படைக் காரணிகள் பின்வருமாரு காணப்படுகின்றன.
1. அரசியல் செல்வாக்கு:
அரசியல்வாதியைப் பகைத்துக்கொள்ளாமல் பேரளவில் அரபிக்காசுக்கு, அல்லது ஊர் நிபந்தனைகளுக்குட்பட்டு தனது அமைப்பை வளர்த்தல்
2. ஊர் மானம், மரியாதை:
கலாசாரா சீர்கேடுகளையும், மார்க்க விரோதச் செயற்பாடுகளையும் அல்லாஹ்வுக்காகக் கண்டிப்பதிலிருந்து தவிர்ந்து, ஊர் மானம் மரிiயாதையை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, தௌஹீத் அமைப்பை வளர்த்தல்.
3. பாதுகாப்பு அச்சம்:
அல்லாஹ்வுக்கும் றஸூலுக்கும் மாத்திரமே அடிபணிவோம் என்று பெனரைப் போட்டுவிட்டு, பெட்டிப்பாம்பாய் மார்க்கத்தை பேசுதல்.
4. மனைவிக்காக தௌஹீத் எழுச்சியைக் கைவிட்டு, பேரளவில் தௌஹீத்வாதியாக காட்டிக்கொள்ளல்.
இது போன்ற பல காரணிகளைக் கூறிக்கொள்ள முடியும்.
ஊர் மானம் எப்போது காற்றில் பறந்தது…?
1979ம் ஆண்டு அப்துர் ரஊப் மௌலவியின் மார்க்க விரோதக் கருத்துக்களுடன் ஊர் மானம் கொடிகட்டி உலகமெல்லாம் பறந்தது.
மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா 1988 இல் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஊர் வரும்போது, அவரை ஓர் பெண், தாய் என்றும்கூடப் பார்க்காது கல்லெறிந்து, செருப்பால் அடித்து விரட்டிய அந்நாள் காத்தான்குடி மக்களின் மானம் உலகில் பறந்த நாள்.
பிற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காத்தான்குடிக்கு வரும்போது, அவர்களுக்கும் கல்லடித்து காத்தான்குடியில் கால்பதிக்க விடாமல் விரட்டியத்த அந்த நாட்களில் ஊர் மானம் பறந்தது.
வட்டி, விபச்சாரம் சம்பந்தமான பிற அமைப்புக்களை ஊரில் அனுமதித்ததுடன் ஊரின் மானம் பறந்துவிட்டது.
பாடசாலைகளில் களியாட்டங்களும், பள்ளிவாயல்களில் பிறந்த நாள் கொண்டாட்டங்களும், ஊருக்குள் இசை நிகழ்ச்சிகளுக்கும், வட்டி சார்ந்த அமைப்புக்களுக்கு உலமாக்கள் பாத்திஹா ஓதியவுடன் ஊர் மானம் பறந்துவிட்டது.
சத்தியத்தைச் சொல்லவேண்டிய உலமாக்களும், பொறுப்புவாய்ந்த சத்மேளனமும் அரசியல்வாதிகளின் காலை வருடியதிலிருந்து ஊர்மானம் காற்றில் பறந்துவிட்டது.
சிறுவர் துஷ்பிரயோகங்களும், கொலைகளும், பாலியல் பலாத்காரங்களும் ஊரில் நிகழ்ந்த போது ஊரின்மானம் பறந்துவிட்டது.
பள்ளிவாயல் படுகொலை ராஜாக்களை ஊருக்கு அழைத்து, பொண்ணாடை போர்த்தியவுடன் ஊர் மானம் பறந்துவிட்டது.
எமது பெண்பிள்ளைகள் சிலர் அந்நிய சமூகத்துடன் கைகோர்த்து திரியும் நிலையையும் பார்த்துக்கொண்டு தமக்கு இது தேவையில்லாத வேலை என்று நினைத்து போர்த்திக்கொண்டு ஊரின் ஒவ்வொரு ஆண் மகனும் நிம்மதியாக உறங்கும் போது ஊர் மானம் பறந்துவிட்டது.
சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கான பயனாளர்கள் அமைதியாக தங்களது கருத்துக்களைப் பகிரும்போது, காத்தான்குடியைச் சேர்ந்த சமூக வலைத்தள பயனாளர்கள் மாத்திரம் சண்டை பிடிப்பது, விவாதிப்பது, விமர்சிப்பது… போன்ற செயல்களால் ஊரின் மானம் என்றோ போய் விட்டது.
பேரளவிலான தௌஹீத் அமைப்புக்களான தாருள் அதரும், இஸ்லாமிக் சென்றரும், பீ. ஜேயின் கிளையும் உறங்கும் இத்தருணத்தில் தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் “கசையடி” உறைக்கத்தான் செய்யும்.
இந்த “கசையடி”கள் உறைக்கும்போதும் மட்டும் “ஊர் மானம்”, “மரியாதை” எங்கிருந்து எம்மவர்களுக்கு வருகிறதோ என்று தெரியவில்லை.
ஹாஜா கந்தூரி வந்தால் மாத்திரம் மழைகாலத் தவளைகள் போல் கத்திக்கொண்டிருக்கும் போலி தஹ்வா அமைப்புக்களும், சர்வதேசப் பிறைக்கு ஆதரவு-எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் அமைப்புக்களும், தங்களது தலைகளில் முக்காடைப் போட்டுக்கொண்டு வீட்டில் அமர்ந்துகொள்வது காலத்தின் தேவையாக அமைகிறது.
- யுவர்காத்தான்குடிக்காக இர்ஷாட் ஏ. காதர்
Leave a comment