அரச ஊழியர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒரு வாகனம்!!

India-manufactured Hyundai cars are seen in line after unloading them off car-carrier ship at Chinese-built Hambantota portகொழும்பு: அரச ஊழியர்களுக்கு, 10 வருடங்களுக்கு ஒரு முறை வரிச் சலுகையுடன் கூடிய வாகன கொள்வனவுக்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (03) தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வாறு வழங்கப்படும் குறித்த அனுமதிப்பத்திரங்களின் உச்ச எண்ணிக்கை ஒருவருக்கு இரண்டு ஆகும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வரவு செலவுத் திட்டத்திலுள்ள பல்வேறு விடயங்கள் குறித்து, அரச வைத்தியர்கள் சங்கம் இன்று (03) முன்னெடுத்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தில், குறித்த வாகன வரிச்சலுகை அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளமையும் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment