Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இந்தியாவுடனான வெற்றியைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா உலக சாதனை

    சிட்னி: இந்தியாவை அடுத்தடுத்து 4 போட்டிகளில் தோற்கடித்த அவுஸ்திரேலிய அணி அதில் ஒரு புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது. இதற்கு முன்பு மேற்கு இந்தியத் தீவுகள் அணி உள்ளூரில் நடந்த போட்டிகளில் தொடர்ந்து 18 வெற்றிகளைப் பெற்று உலக சாதனை படைத்திருந்தது. தற்போது அதை முறியடித்துள்ளது அவுஸ்திரேலியா. நேற்று இந்தியாவுக்கு எதிரான 4வது போட்டியில் கிடைத்த வெற்றியானது, அவுஸ்திரேலியாவுக்கு உள்ளூரில் கிடைத்த தொடர்ச்சியான 19வது ஒரு நாள் வெற்றியாகும். இதன் மூலம் மேற்கு இந்தியத் தீவுகளின் சாதனையை…

  • “சீனாவினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்”- பிரதமர்

    கொழும்பு: சீனாவினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுவிஸர்லாந்து டவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

  • “வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை”- ஜனாதிபதி

    கொழும்பு: போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து நிபுணர்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

  • மூக்குடைபட்ட வை.எல்.எஸ்: நீதிமன்றில் தடைமனு நிராகரிப்பு

    ஏ.எச்.எம்.பூமுதீன் கொழும்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாட்டை இரத்துச் செய்யுமாறும் புதிதாக தெரிவான செயலாளரை இடை நிறுத்துமாறும் கோரி வை.எல்.எஸ். ஹமீடினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தடை மனுக் கோரிக்கை இன்று (21) நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

  • முன் அனுமதியின்றி உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்குத் தடை

    கொழும்பு: இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான சிறுநீரக மாற்று மோசடி குறித்த புதிய விசாரணைகளை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் திணைக்களத்துக்கு அமைச்சு பணிப்புரை விடுத்திருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரம தெரிவித்தார்.

  • “மஹிந்த-சந்திரிகா ஆசீர்வாதத்துடன் வெற்றிலைச் சின்னத்திலேயே சு.க. போட்டி”

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் சகலரையும் ஒன்றிணைத்து ஐ.ம.சு.முவின் வெற்றிலைச் சின்னத்திலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சு.க போட்டியிடுமென அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

  • மாடுகளால் தேர்தலில் வாக்களிக்கமுடியாது

    முஹம்மது நியாஸ் நமது நாட்டில் கடந்த சில மாதங்களாக அடக்கி வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்த மாட்டிறைச்சி சர்ச்சையானது தற்போது மீளவும் தலை தூக்க ஆரம்பித்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. மாடுகளை அறுப்பது தடை செய்யப்படவேண்டும் என்றும் மாட்டிறைச்சிக்கடைகள் மூடப்பட வேண்டும் எனவும் பலவாறான கோஷங்கள் ஆங்காங்கே ஒலித்துவருவதை நாம் காண்கிறோம்.

  • பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தின் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் : 19 பேர் பலி

    சார்சத்தா: பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் சார்சத்தாவில் உள்ள பச்சா கான் பல்கலைக்கழகத்தின் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டும் 50 பேர் காயமடைந்தும் உள்ளனர். பச்சா கான் பல்கலைக்குள் நுழைய முயன்ற இவர்கள் குறைந்தது மூன்று பேரையாவது காயப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குண்டுவெடிக்கும் சத்தமும் கேட்டதாக இந்தச் சம்பத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

  • மாடறுப்பு விவகாரம் – முஜிபுர் ரஹ்மான்

    கொழும்பு: கடந்த காலங்களில் இனவாதிகள் முஸ்லிம்கள் மீது காழ்புணர்வுகொண்டு எழுப்பிய கோசங்களில் பிரதானமாக மாடறுப்பு விவகாரம் இருந்து வந்தது. அவர்கள் முஸ்லிம்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவும் இன முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவுமே மாடறுப்பு விவகாரத்தை பூதாகரமாக்கினர்.

  • மாடுகளை பாதுகாக்க வேண்டும் – ஜனாதிபதி

    பயாகலை: இலங்கையிலுள்ள மாடுகளை பாதுகாக்கும் வகையில், மாட்டு இறைச்சியை உண்போருக்காக, வெளிநாடுகளிலிருந்து அவற்றை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, தான் நிதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

  • தென்கிழக்கு பல்கலை விரிவுரையாளரின் நூல் ஜெர்மனி யில் வெளியீடு

    சப்னி கொழும்பு: இலங்கை தென்கிழக்கு பல்கலையின் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைசேர்ந்த தகவல் தொழிநுட்ப விரிவுரையாளர், எழுத்தாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி அவர்களும், இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவக (SLIIT) சிரேஷ்ட விரிவுரையாளர், தகவல் முகாமைப்பொறியியல் துறைத்தலைவர் எஸ். சமந்த தெலிஜ்ஜகொட அவர்களும் இணைந்து எழுதிய “இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ முறைமைகள்” (Electronic Waste Management System) எனும் ஆங்கில மொழி மூல நூலானது ஜெர்மனி யின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான Lambert Academic Publishing அமைப்பினால்…

  • நீங்களும் உதவுங்கள்

    வாசகர்கள் கவனத்திற்கு, குறித்த செய்தியில் தவறு இருப்பதாக அனுப்புனர் தெரிவித்தமைக்காக இச்செய்தி அகற்றப்படுகிறது. தவறுக்கு வருந்துகிறோம்.

←Previous Page
1 … 251 252 253 254 255 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar