பயாகலை: இலங்கையிலுள்ள மாடுகளை பாதுகாக்கும் வகையில், மாட்டு இறைச்சியை உண்போருக்காக, வெளிநாடுகளிலிருந்து அவற்றை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, தான் நிதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பயாகலையில் (18) இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனத் தெரிவித்த ஜனாதிபதி, தான் எவ்விதமான மீன், இறைச்சி வகைகளையும் உண்ணாத ஒருவர் என்பதால் இது குறித்து தன்னால் பேசமுடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கால்நடைகளின் போக்குவரத்து தொடர்பிலான சட்ட திட்டங்கள் கடைப்பிடிக்கப்படாத நிலையில், அது குறித்து உரிய தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியமானதாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
Leave a comment