“வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை”- ஜனாதிபதி

maithiriகொழும்பு: போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து நிபுணர்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் முன்னெடுப்பில் இலங்கையின் இணை-அனுசரணையில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சிறப்பு நீதி விசாரணைப் பொறிமுறை ஒன்றை நிறுவுமாறும் அதற்கு காமன்வெல்த் உள்ளிட்ட வெளிநாடுகளின் நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள் மற்றும் விசாரணையாளர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment