Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி உணவகத்தில் வாங்கிய இறைச்சி ரொட்டியில் ஆணி!!!

    காத்தான்குடி: காத்தான்குடியிலுள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் இறைச்சி ரொட்டி வாங்கி சாப்பிட்ட போது அதனுள் ஆணி ஒன்று இருந்துள்ளது. இதனை அவர் பொதுச்சுகாதார பரிசோதகரிடம் சென்று முறையிட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தாங்கள் இதனை பொதுச்சுகாதார பரிசோதகரிடம் தகுந்த ஆதாரங்களுடன் முறையிட்டுள்ளதாகவும், இது போன்ற செயற்பாடு இனி நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

  • அரநாயக்கவில் மற்றுமொரு நிலச்சரிவு

    கேகாலை: கேகாலை மாவட்டத்திலுள்ள அரநாயக்க பிரதேசத்தில் சனிக்கிழமை மாலை மற்றுமோர் நிலச்சரிவு அனர்த்தம் இடம் பெற்றுள்ளது. கபரகொல பகுதியில் இந்த நிலச்சரிவு இடம் பெற்றிருப்பதாக இடர் முகாமைத்துவ மையம் கூறுகின்றது. அந்தப் பகுதியிலுள்ள குடியிருப்பாளர்கள் ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் தெரிவிக்கின்றது.

  • 12வது தடவையாக ஆங்கிலக் கிண்ணத்தைக் கைப்பற்றியது மன்செஸ்டர் யுனைடட்

    லண்டன்: சற்றுமுன்னர் லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் அபாரமாக இடம்பெற்ற எஃப். ஏ ஆங்கிலக் கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில், கிறிஸ்டல் பளஸ் அணியை 2:1 என்ற கோல் அடிப்படையில் மன்செஸ்டர் யுனைடட் வெற்றிபெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

  • இதுவரை 71 பேர் உயிரிழப்பு

    கொழும்பு: மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற அனர்த்தங்களினால் 200ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், காணாமலும் போயிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இடர் முகாமைத்துவ அமைச்சகம் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி 71 பேர் உயிரிழந்தும், 127 பேர் காணாமலும் போயிருக்கிறார்கள். இதில் 46 மரணங்கள் நிலச்சரிவு அனர்த்தங்களின் பின்னர் இடம் பெற்றுள்ளது.

  • மள்வானை ரக்ஸபானை ஜும்ஆ மஸ்ஜித் விடுக்கும் அவசர வேண்டுகோள்

    மள்வானை: 1700 பேரை உள்ளடக்கிய எமது ஊர்வௌ்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 7 அடி உயரத்திற்கு ஊரைச் சுற்றி ஆற்று நீர் பாய்வதால் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரமின்மையால் வெளியுலகத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 80 இற்கு மேற்பட்ட வீடுகளும் 50 இற்கு மேற்பட்ட வியாபார ஸ்தலங்களும் முற்றாக நீரில் மூழ்கியுள்ள நிலையில் கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன. மக்கள் தற்காலிக இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

  • வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்கு காத்தான்குடி சம்மேளனத்தினரால் பாரிய நிதிசேகரிப்பு!

    S. சஜீத் காத்தான்குடி: எமது நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு தற்போது முகாம்களில் இடம்பெயர்ந்து இருக்கும் சகோதரர்களுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், (20.05.2016) இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் காணப்படும் ஜும்ஆ பள்ளிவாயல்களில் ஏற்கனவே பொதுமக்களுக்கு விடுத்திருந்த அறிவித்தலின் படி ஜும்ஆ தொழுகையினை தொடர்ந்து “வெள்ள அனத்தத்தினால் பாதிக்கப்ட்ட நம் உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்” எனும் தோணிப் பொருளை முன்வைத்து சம்மேளன உறுப்பினர்கள் மற்றும்…

  • காத்தான்குடி கடற்கரை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் விஜயம்

    காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2016.05.29ஆந்திகதி (இன்று) விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர், NAQDA திறுவனத்தினுடைய தலைவர் அதன் பொது முகாமையாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலரும் வருகை தந்திருந்தனர்.

  • நிவாரணப் பணிகளில் ஹிரா பௌண்டேஷன் களத்தில்

    கொழும்பு: நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன முன்னின்று வழங்கி வருவதாகவும், கிழக்கு மாகாணத்துக்கு வெளியே மல்வானை மற்றும் அரநாயக்க பகுதிகளுக்கு விசேட உதவிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பின் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் கூறியதாவது:-

  • அனர்த்த முகாமைத்து அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி பற்றாக்குறை

    நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கொழும்பு: சீரற்ற வானிலையினால் வீடு – சொத்துக்களை இழந்த மக்களுக்கு இழப்பீட்டினை வழங்க அரசு நடவடிக்கை எடுத்த போதிலும் அதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல எனத்தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அதற்குத் தேவையான முழுமையான நிதியை சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

  • சூபிஸ சித்தாந்த ஒழிப்பு மாநாடு

  • ‘மாணவர்களையும், மாணவிகளையும் நாம் கண்காணிப்பதை விட ஆலிம்களையும், ஆசிரியர்களையுமே நாம் எச்சரிக்கையுடன் அவதானிக்க வேண்டியுள்ளது’

    எமது காத்தான்குடி நகரமானது, இந்த நாட்டிலும் முழு உலகிலும் முன்மாதிரியான ஒரு முஸ்லிம் நகரம் என்று பெருமிதமாகச் சொல்லிக் கொண்டாலும், இங்கு நாளாந்தம் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களைப் போன்று, பாலியல் விபச்சாரச் செயற்பாடுகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

  • காணாமல்போன ஈஜிப்ட் எயார் விமானத்தின் சிதிலங்கள் கண்டுபிடிப்பு

    கெய்ரோ: நடுவானில் காணாமல்போன ஈஜிப்ட் எயார் எம்எஸ்804 விமானத்தின் சிதிலங்கள் கிரேக்கத் தீவான கர்பெதஸின் தென் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என எகிப்திய விமானத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.பரிஸிலிருந்து 66 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் கெய்ரோவுக்கு சென்றுகொண்டிருந்த அந்த விமானம் புதன்கிழமை நள்ளிரவு காணாமல் சென்றது.

←Previous Page
1 … 211 212 213 214 215 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar