காத்தான்குடி கடற்கரை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் விஜயம்

shibly mahinda amaraveeraகாத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2016.05.29ஆந்திகதி (இன்று) விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர், NAQDA திறுவனத்தினுடைய தலைவர் அதன் பொது முகாமையாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலரும் வருகை தந்திருந்தனர்.

மாவட்ட செயலகத்திற்கு முக்கிய ஓர் அபிவிருத்தி திட்டம் சம்பந்தமான கலந்துரையாடலுக்கு வருகைதந்த அமைச்சர் உட்பட்ட உயர் அதிகாரிகளை மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக காத்தான்குடியில் மீனவர்களின் நன்மைகருதி காத்தான்குடி கடற்கரையில் அமையப்பெற்றுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் 2010ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு இதுவரையில் செயலற்ற நிலையில் காணப்படுவதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையத்தினை உடனடியாக பார்வையிட வேண்டுமெனவும் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

shibly mahinda amaraveera

அதற்கமைவாக இதனை அமைச்சர், அமைச்சின் செயலாளர், NAQDA நிறுவனத்தினுடைய தலைவர் இதனை பார்வையிட்டதுடன் இதனை துரித கதியில் இயங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், இது விடயமாக தன்னுடன் தொணர்பினை மேற்கொள்ளுமாறும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

shibly mahinda amaraveera.jpg1

மாகாண சபை உறுப்பினர் இவ்எரிபொருள் நிரப்பு நிலையத்தினை இயங்க வைப்பதற்கு ஆரம்பம்தொட்டு சம்மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

  • M.T. ஹைதர் அலி

Published by

Leave a comment