WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் பாடசாலைக்கு ஆப்பு வைக்கும் பௌசுல் ஹமீட்!

    கொழும்பு: புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் கல்வி அபிவிருத்தி கொள்கையின் படி மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள தேசிய பாடசாலைகளைப் போன்று மாகாண மட்டத்திலுள்ள பாடசாலைகளும் தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற நிகழ்ச்சித்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மாகாண மட்டத்தில் பாடசாலைகளை தரமுயர்த்தப்படுவதின் மூலம் பிரபல பாடசாலைகளுக்கு தனது பிள்ளைகளை சேர்ப்பதற்காக பெற்றோhகள் மத்தியில் உள்ள போட்டிக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு கல்வி கற்றலுக்கான சிறந்த வாய்ப்பை ஏனைய பாடசாலைகளுக்கும் வழங்கி மாகாண மட்டத்தில் பாடசாலைகளின் தரத்தை உயர்த்துவதே அதன் கொள்கை என கூறப்படுகிறது.

  • காலம் செய்த கோலமடி

    விருந்தினர் வந்ததும் விசிறியைக் கேட்பார் -அந்தக் காலம் இருந்திடும் முன்னே இதை சார்ஜில் போடுங்க -இந்தக் காலம் டீயைக் கொடுத்து டீப்பாய் கதைப்பார் – அந்தக் காலம் ஐ-டியைக் கொடுத்து அட் பண்ண சொல்வார் – இந்தக் காலம்

  • முரளியும் இலங்கை கிரிக்கட் சபையும்…

    கொழும்பு: இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய அணிக்கு 10 நாட்கள் பயிற்சி கொடுக்க முரளிதரன் ஒப்புதல் தெரிவித்திருந்ததையடுத்து, முரளிக்கும் இலங்கை கிரிக்கட் சபைக்குமிடையில் விரிசல் ஏற்பட்டுவருகிறது. இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபலா கூறுகையில், நாங்கள் கடுமையாக ஏமாற்றமடைந்துள்ளோம். முரளிதரனை காப்பாற்றுவதற்காக வாரியம் நிறைய செலவு செய்துள்ளது. அவரை நாங்கள் மூன்று முறை காப்பாற்றியுள்ளோம். இதற்கு நிறைய வாரியம் செலவு செய்துள்ளது. தொழில்பூர்வமாக அவர் அவுஸ்திரேலியாவுக்கு ஆலோசனை வழங்குவது பற்றி ஒன்றுமில்லை, ஆனால் விஷயம் அறம் சம்பந்தப்பட்டதாகும்…

  • உலகில் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்

    கொழும்பு: உலகளாவிய ரீதியில் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய் புற்றுநோய்க்கு வெற்றிலை மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் பாவனையே காரணம் என்றும் பல் வைத்திய சேவையின் பிரதிப் பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். இதன்காரணமாக வெற்றிலை பாவனையை முற்றாக நிறுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • பல்லேகல மைதானத்தினுள் நிர்வானமாக நுழைந்த இரசிகர்

    பல்லேகல: நேற்று (26) இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் முதலாவது டெஸ்ட் போட்டியானது கண்டி பல்லேகல விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. இந்நிலையில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் தன்னுடைய ஆடைகள் முழுதையும் கலைந்து விட்டு மைதானத்திற்குள் நிர்வானமாக உள்நுழைந்துள்ளார். மழை காரணமாக போட்டியானது இடைநிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த நபர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.

  • ‘தார்மீக பொறுப்புள்ள கமத்தொழில், நோயற்ற மக்கள்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வு

    எம் எச் எம் அன்வர் காத்தான்குடி: இயற்கையை நேசிக்கக் கூடிய மற்றும் மரங்களை பாதுகாக்கக் கூடிய சந்ததிகளை இப்போதிருந்தே நாம் உருவாக்க கடமைப்பட்டுள்ளோம் இவ்வாறு தார்மீக பொறுப்புள்ள கமத்தொழில் நோயற்ற மக்கள் எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி 167 பி பிரதேசத்தில்  நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் தெரிவித்தார். சூழல் பாதுகாப்பு தேசிய வீட்டுத்தோட்ட பயிர்களை நடுதல் வேலைத்திட்டத்தின் கீழ் இத்திட்டம் பிரதேச மட்ட ரீதியில் இடம்பெற்றது.

  • வெற்றிபெறுமா கிழக்கின் எழுச்சி?

    கட்சி ஒன்று அரசியல்ரீதியாக வீழ்ச்சியைச் சந்திக்கின்றபோது அல்லது கட்சியின் முக்கியஸ்தர்களுக்குப் பதவிகள் கிடைக்காதபோது அந்தக் கட்சியின் தலைமைத்துவம் பலவீனமான தலைமைத்துவமாக சித்தரிக்கப்படுவதை நாம் அறிவோம். மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் அவரது அரசு மிகவும் பலமாக இருந்ததால் ஐக்கிய தேசிய கட்சி பலமிழந்து காணப்பட்டது.யுத்த வெற்றியே மஹிந்தவின் ஆட்சி பலமடைவதற்கு காரணம் என அறிந்தும் கூட,ரணிலின் பலவீனமே மஹிந்தவின் ஆட்சி பலமடையக் காரணம் எனக் கூறப்பட்டது.

  • ஐவெயார் அமைப்பின் மறுப்பறிக்கைக்கான பதிலறிக்கை

     முஹம்மது நியாஸ் யானை அடிப்பதற்கு முதல் தானே அடித்துக் கொண்டு தற்கொலை செய்த கதையானது! கடந்த 22: 07: 2016 அன்று இரவு சுமார் பத்துமணி அளவில் காத்தான்குடியைச் சேர்ந்த தனிப்பட்ட நபர்கள் பலருடைய முகநூல் பக்கங்களிலும் ‘நியாஸின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை மாத்திரமின்றி விஷமத்தனமானவையுமாகும் –

  • “பத்து முரளிகள் பந்துவீசினாலும் அவுஸ்திரேலியாவை நாங்கள் வீழ்த்துவோம்”

    கொழும்பு: பத்து முத்தையா முரளிதரன்கள் வந்து பந்து வீசினாலும் அதற்கு தாக்கு பிடிக்க கூடியவாறு இலங்கை அணியை தயார் செய்வோம் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். நேற்று (24) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  • கருத்தரிக்க விரும்பும் பெண்கள் உட்கொள்ளவேண்டிய உணவுகள்

    பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் கருமுட்டையின் ஆரோக்கியத்திற்கு இரும்புச்சத்து மிகவும் இன்றியமையாதது. இரும்புச்சத்து உடலில் குறைவாக இருந்தால் அதனால் ஓவுலேசன் பாதிக்கப்பட்டு அதனால் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும். பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் கருமுட்டையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளது. எனவே தினமும் சிறிது பீன்ஸ் அல்லது பருப்பு வகைகளை உணவில் சேர்த்து வாருங்கள்.

  • வரலாற்றிலேயே முதன்முறையாக குவைத்தில் புதிய சாதனை படைத்த வெப்பநிலை!

    SHM குவைத்: உலக வரலாற்றிலேயே முதல் முறையாக குவைத்தில் அதிகபட்சமாக 54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கடந்த வியாழக்கிழமை பதிவாகியுள்ளது. குவைத்தில் உள்ள மித்ரிபா பகுதியில் இவ்வெப்பநிலை பதிவாகியிருந்தது. அதேதினம் அண்டை நாடான ஈராக்கிலும் வெப்பநிலை உச்சத்தில் இருந்தது. . ஈராக்கின் பஸ்ரா நகரில் கடந்த வியாழக்கிழமை வெயிலின் அளவு 53.9 டிகிரி செல்சியஸாக இருந்தது.

  • பிரித்தானியாவை தண்டிக்கிறதா பிரான்ஸ்? போக்குவரத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள்

    லண்டன்: பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான எல்லைப்பகுதியில் அமைந்துள்ள Dover துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்பால் பிரித்தானிய பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார், 250,00 வாகனங்கள் சுமார் 20 மணிநேரமாக நின்றுகொண்டிருக்கின்றன. மேலும், ஆயிரிக்கணக்கான சுற்றுலாவாசிகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் Kent பொலிசார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வந்த போதிலும், போக்குவரத்து சரிசெய்தபாடில்லை.

←Previous Page
1 … 185 186 187 188 189 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar