காலம் செய்த கோலமடி

whatsup facebookவிருந்தினர் வந்ததும்
விசிறியைக் கேட்பார் -அந்தக் காலம்
இருந்திடும் முன்னே
இதை சார்ஜில் போடுங்க -இந்தக் காலம்

டீயைக் கொடுத்து
டீப்பாய் கதைப்பார் – அந்தக் காலம்
ஐ-டியைக் கொடுத்து
அட் பண்ண சொல்வார் – இந்தக் காலம்

Wife சுகமா
வார்த்தைகளில் சுகம் -அந்தக் காலம்
WiFi பாவிக்கவா
வாய் விட்டுக் கேட்பார் – இந்தக் காலம்

பொண்ணக் கொடுத்தாச்சா
புதுப் பொண் எப்படி -அந்தக் காலம்
போணக் கொடுத்தாச்சா
புது போண் எப்படி -இந்தக் காலம்

வட்டிலப்பம் கொடுத்து
வாய்ருசி அளிப்பார் – அந்தக் காலம்
வட்ஸ் அப் நியூஸ் பற்றி
வாய் நிறையக் கதைப்பார் – இந்தக் காலம்

உண்ட பின்னால்
உட்கார்ந்து கதைப்போம் -அந்தக் காலம்
கண்டக்ட் நம்பரில்
கதைப்போம் பிறகு – இந்தக் காலம்.

பக்கத்து வீட்டு
பலாயைக் கழுவுவார் – அந்தக் காலம்
பக்கத்து வீட்டு
பலாயை பகிர்வார் – இந்தக் காலம்

காலம் மாறினும்
காட்சி மாறினும்
ஊர் பலாய் கழுவல்
ஒரு போதும் மாறாது.

  • முகமட் நிஷவ்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s