மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் பாடசாலைக்கு ஆப்பு வைக்கும் பௌசுல் ஹமீட்!

fawzul hameedகொழும்பு: புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் கல்வி அபிவிருத்தி கொள்கையின் படி மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள தேசிய பாடசாலைகளைப் போன்று மாகாண மட்டத்திலுள்ள பாடசாலைகளும் தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற நிகழ்ச்சித்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மாகாண மட்டத்தில் பாடசாலைகளை தரமுயர்த்தப்படுவதின் மூலம் பிரபல பாடசாலைகளுக்கு தனது பிள்ளைகளை சேர்ப்பதற்காக பெற்றோhகள் மத்தியில் உள்ள போட்டிக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு கல்வி கற்றலுக்கான சிறந்த வாய்ப்பை ஏனைய பாடசாலைகளுக்கும் வழங்கி மாகாண மட்டத்தில் பாடசாலைகளின் தரத்தை உயர்த்துவதே அதன் கொள்கை என கூறப்படுகிறது.

இதற்கமைய ”அருகிலுள்ள சிறந்த பாடசாலை” (லங்கம பாசல ஹொந்தம பாசல) எனும் திட்டத்தை அரசாங்கம் வடிவமைத்துள்ளது. இந்த அடிப்படையில் மேல்மாகாணத்தில் 51 பாடசாலைகள் இந்த திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும், மத்திய கொழும்பில் மாளிகாவத்தை தாருஸ்ஸலாமும், ஹேமமாலி பாலிகா வித்தியாலயமும் தெரிவு செய்யப்பட்டள்ளன.

அரசாங்கத்தின் பாடசாலைகளை அபிவிருத்திச் செய்யும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், வருடா வருடம் ஒதுக்கப்படும் நிதியிலிருந்து குறித்த பாடசாலைகள் சகல துறைகளிலும் ‘ஏ’ தர நிலைக்கு தரமுயர்த்ப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த பாடசாலைக்கான இந்த நிதி உதவித்திட்டம் 2021 ம் ஆண்டு வரை தொடர்ந்து இடம்பெறும் என்றும் அறிய வருகிறது.

இந்த வகையில் முதற்கட்டமாக தாருஸ்ஸலாம் பாடசாலைக்கு அரசாங்கம் ஏழு கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. கொழும்பிலுள்ள பின்தங்கிய பகுதியிலுள்ள தாருஸ்ஸலாம் பாடசாலைக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை நினைத்து பலர் சந்தோசப்படும் நிலையில், அரசாங்கத்தின் இந்த நிதியுதவி திட்டத்திற்கு கடந்த மஹிந்த ஆட்சியின் அராஜகத்திற்கு துணைபோன அரசியல்வாதிகளான அமைச்சர் பௌசியும், அவரது புத்திரரான நவ்ஸர் பௌசியும், பிரபல ஆடை வியாபரியான பௌசுல் ஹமீடும் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும், அரசாங்கத்தின் இந்ந நிதியுதவியை தடுத்து நிறுத்துமாறு கல்வியமைச்சரை இந்த மூவரும்; எழுத்து மூலம் வேண்டியிருப்பதாகவும் அறிய வருகிறது.

தாருஸ்ஸலாம் பாடசாலைக்கு அரசாங்கத்தின் இந்ந நிதியுதவியின் மூலம் ஏற்கனவே இருக்கும் பழைய கட்டடம் ஒன்றை தகர்த்துவிட்டு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

இதேவேளை, சர்வதேச மேமன் சங்கமும் தாருஸ்ஸலாம் பாடசாலைக்கு 25 கோடி ரூபாய்கள் செலவில் மற்றுமொரு அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து இருக்கிறது. இந்த வேலைத்திட்டத்தின் ஓர் அம்சமாக புதிய கட்டடம் ஒன்றுக்கான அடிக்கல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் கடந்த ஜனவரி மாதம் நடப்பட்டது.

இந்த இரண்டு நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் தாருஸ்ஸலாம் பாடசாலைக்கு அரசாங்கத்திடமிருந்து 7 கோடி ரூபாய்களும், சர்வதேச மேமன் சங்கத்திடமிருந்து 25 கோடி ரூபாய்களும் கிடைத்திருக்கிறது. தாருஸ்ஸலாமின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கு இப்போது மொத்தமான 32 கோடி ரூபாய்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

இது ஒரு மகிழ்ச்சியான விடயமாக பெற்றோராலும், பொதுமக்களாலும் பார்க்கப்பட்டாலும், சர்வதேச மேமன் சங்கத்தின் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை செயற்படுத்த செரன்டிப் என்ற நிறுவனம் சார்பாக முன்வந்திருக்கும் ஆடை வியாபாரியான பௌசுல் ஹமீட் தாருஸ்ஸலாம் பாடசாலையின் அபிவிருத்தித் திட்டத்திற்கு ஆப்பு வைக்கும் சதித்திட்டத்தில் இறங்கியிருக்கிறார்.

இவருக்கு ஒத்தாசையாக மஹிந்த ஆதரவு அரசியல்வாதிகளான அமைச்சர் பௌசியும் அவரது புத்திரர் நவ்ஸர் பௌசியும் இணைந்து செயற்பட்டு வருவது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

இந்தச் சதியின் ஒரு வடிவமாக தாருஸ்ஸலாம் பாடசாலைக்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ள ஏழு கோடி ரூபா அபிவிருத்தித் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சர்வதேச மேமன் சங்கத்தால் மேற்கொள்ளப்பட விருக்கும் 25 கோடி ரூபாய்களுக்கான திட்டத்திற்கு மட்டும் அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஆடை வியாபாரியான பவ்சுல் ஹமீட்; கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களிடம் 21.07.2016 அன்று எழுத்து மூலம் ஒரு மோசமான, வஞ்சகமாக வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.

இவரோடு இணைந்து மாகாண சபை உறுப்பினரான நவ்ஸர் பௌசியும் தாருஸ்ஸலாம் பாடசாலைக்கான நிதியுதவியை நிறுத்துமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு எழுத்து மூலம் மற்றுமொரு தனது வஞ்சகத்தனமான வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.

இவர்களின் இந்த வேண்டுகோள் அநீதியானது என்றும் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருக்கும் 7 கோடி ரூபாயையும் மற்றும் உலக மேமன் சங்கத்தினரால் வழங்கப்படவிருக்கும் 25 கோடி ரூபாய்களையும் சேர்த்து 32 கோடி ரூபாய்களையும் தாருஸ்ஸலாமின் அபிவிருத்திக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் பெற்றோர்கள் இப்போது கோரிக்கை விட்டிருக்கின்றனர்.
தனியார் அமைப்பு ஒன்றின் மூலம் கிடைக்கும் உதவியைப் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தின் நிதி உதவியை நிராகரிப்பது பாடசாலையின் எதிர்கால நலனுக்கு பாதகமாய் இருக்கும் என்றும் பெற்றோர் கருதுகின்றனர்.

fawzul hameed

சர்வதேச மேமன் சங்கத்தினால் வழங்கப்படவிருக்கும் நிதி உதவியை மட்டுமே தாருஸ்ஸலாம் பாடசாலைக்கு பயன்படுத்த வேண்டும் என்று எவ்வித அடிப்படையுமின்றி கோரிக்கை விடுக்கும் பௌசுல் ஹமீடின் இந்த வஞ்சகத் தனமான செயலின் பின்னணியில் முஜீபுர் றஹ்மானுக்கு எதிரான அவரின் காழ்ப்புணர்ச்சியும், குரோதமுமே காரணமென்று கூறப்படுகிறது.

தாருஸ்ஸலாம் பாடசாலையை அரசாங்கத்தின் இந்த அருகிலுள்ள சிறந்த பாடசாலை திட்டத்தினுள் உள்ளீர்ப்பதற்கு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் அயராது பாடுபட்டுள்ளார்.

பௌசுல் ஹமீடின் இந்த வஞ்சகமான கோரிக்கையின்; பின்னணியில் முஜீபுர் றஹ்மான் மீதான குரோதமே காரணம் என்றும் அறிய வந்திருக்கிறது.

முஜீபுர் றஹ்மானோடு பவ்சுல் ஹமீடுக்கு ஏன் இப்படி குரோதம் என்று அலசி ஆராய்ந்த போது பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.

கொழும்பு சாஹிராக் கல்லூரியை ஏழை மாணவர்கள் நுழைய முடியாத கல்லூரியாக பவ்சுல் ஹமீட் மாற்றி வருவதையும் அக்கல்லூரியை பணக்கார வர்க்கத்தின் பாடசாலையாக மாற்றி வருவதையும் முஜீபுர் றஹ்மான் கண்டித்து வருகிறார்.

மத்திய கொழும்பின் தெடமகொடை, மருதானை, மாளிகாவத்தை, புதுக்கடை போன்ற பகுதிகளைச் சேர்ந்த எளிய முஸ்லிம் பிள்ளைகளை அவர்களின் பெற்றோர்களால் இலட்சக்கணக்கணக்கான ரூபாய்களை சாஹிரா பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்க முடியாது என்ற காரணத்திற்காக பிள்ளைகளுக்கு சாஹிராவில் அனுமதி மறுக்கப்படுகிறது.

முதலாம் தர நேர்முகப் பரீட்சையில் பிள்ளைகளோடு பெற்றோரும் நேர்முகப் பரீட்சைக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. பெற்றோரின் கல்வித் தரம், தொழில் மற்றும் பொருளாதார நிலையை வைத்து பிள்ளைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
பிள்ளைகளின் கல்வி கற்கும் உரிமையை பணத்தை வைத்து எடைபோடும், ஏழை பிள்ளைகளின் கல்விக்கு தடைபோடும் பவ்சுல் ஹமீடின் எதேச்சதிகார செயலுக்கு எதிராக முஜீபுர் றஹ்மான் குரல்கொடுத்தும், போராடியும் வருகிறார்.

முஜீபுர் றஹ்மான் மீதான பவ்சுல் ஹமீடின் வஞ்சகத் தனத்திற்கு காரணம் இது என்றே அறிய வருகிறது. எனவே மத்திய கொழும்பில் முஜீபுர் றஹ்மானின் அரசியல் செல்வாக்கை அழிப்பதற்கான முயற்சியாகவே இது அரங்கேற்றப்படுகிறது. பவ்சுல் ஹமீடின் இந்த சதிப்பயணத்திற்கு ஊன்றுகோலாக கொழும்பில் செல்வாக்கிழந்து, தோல்வியடைந்து காலாவதியான அரசியல்வாதிகளான பௌசியும், அவரது புத்திரர் நவ்ஸர் பௌசியும் கிடைத்துள்ளனர்.

சர்வதேச மேமன் சங்கம் பாடசாலை ஒன்றுக்கு உதவி வழங்க முன் வந்த சந்தர்ப்பத்தை வைத்து பவ்சுல் ஹமீட் தனது தனிப்பட்ட குரோதத்தை தீர்த்துக்கொள்ள முயற்சிப்பதன் மூலம் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த வறிய மாணவர்களின் கல்வியின் முன்னேற்றத்திற்கு ஆப்பு வைக்கவே முயற்சிக்கின்றார்.

நல்லவர் போல் நடித்து ஏழை பிள்ளைகளின் கல்விக்கு குழிபறிக்கும் சதிகாரர்களை முஸ்லிம் சமூகம் அடையாளம் காண வேண்டும். பவ்சுல் ஹமீடின் சதியின் பின்னணியில் இருக்கும் இந்த அரசியல்வாதிகள் மஹிந்த மகாராசாவின் காலத்தில் மிகவும் பலம்வாய்ந்தவர்களாக இருந்தவர்கள். இருபது வருட இவர்களின் ஆட்சியில் கொழும்பு மக்களின் கல்விக்காக இவர்கள் செய்த சேவைகள் என்ன?

கொழும்பு மக்களின் கல்விக்கு இவர்கள் இழைத்த இடையூறுகள் எத்தனை எத்தனை?
சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் அமைச்சர் அஷ;ரப் தெஹிவளை பகுதியில் முஸ்லிம் பாடசாலையொன்றை ஆரம்பிக்க முயற்சி செய்த போது அதை தடுத்து நிறுத்தியவர்தான் இந்த பவ்சி.

அமைச்சர் அஷரபை அம்பாறைக்கு சென்று பாடசாலை கட்டுங்கள் கொழும்பை நான் கவனித்துக்கொள்கின்றேன் என்று பம்மாத்து பேசியவர்தான் இந்த பவ்சி. சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸுஹைர் இதே தாருஸ்ஸலாம் பாடசாலைக்கு கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்காக அடிக்கல்லை நாட்டிய போது அந்தக்கல்லை பிடுங்கி எரிந்தவர்தான் இந்த பவ்சி.

கொழும்பு வாழ் பிள்ளைகளின் கல்வியை பாழ்படுத்தும் இந்த சதிகார கும்பலை முஸ்லிம் சமூகம் முற்றாக நிராகரிக்க வேண்டும் இருபது வருடங்கள் மஹிந்த ஆட்சியிலிருந்து மஹிந்தவின் அராஜகங்கiளை ஏற்றுக்கொண்டு ‘பதவியே கதி’ என்றிருந்து ஒன்றும் புடுங்காதவர்கள் இனிமேலும் எதைத்தான் புடுங்க போகின்றார்கள்?

இன்று இந்த சமூக விரோத முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆடை வியாபாரி பவ்சுல் ஹமீடும், அவருடன் இணைந்து செயற்படும் செரண்டிப் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஏனைய அங்கத்தவர்களும், இந்த திட்டத்திற்கு தவிசாளராக செயற்படும் காலாவதியான அரசியலவாதி பௌசியும், நவ்ஸர் பௌசியும் கொழும்பு வாழ் முஸ்லிம் சமூகத்தால் முற்றாக கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

முஜீபுர் றஹ்மான் மீதான குரோதத்தை தீர்த்துக்கொள்வதற்காக தாருஸ்ஸலாம் பாடசாலையை பயன்படுத்த வேண்டாம் இந்த மூன்று வியாபாரிகளிடமும் கேட்டுக்கொள்கிறோம். தமது பாடசாலைக்கு தொடராக அதாவது 2021 வரை கிடைக்கவுள்ள அரசாங்கத்தின் நிதி உதவியை இழக்க யாரும் தயாரில்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானிடம் வினவிய போது,

சர்வதேச மேமன் சங்கத்தால் மேற்கொள்ளப்படவிருக்கும் அபிவிருத்தித் திட்டத்திற்கு தான்; தடையாக இருக்கப்போவதில்லையென்றும் இத்தகைய உதவிகளை தான் வரவேற்பதாகவும், தாருஸ்ஸலாம் பாடசாலைக்குள் ஒரு தாஜ்மஹாலைக் கட்ட இவர்கள் (பவ்சி, நவ்ஸர் பவ்சி, பவ்சுல் ஹமீட்) மூவரும் விருப்பினால் அதற்கும் தான் விருப்பம் தெரிவிப்பதாகவும் கூறினார். தன்மீதுள்ள குரோதத்திற்காக அரசாங்கத்தின் உதவியை வேண்டாம் என்று கூறுவது மிகவும் மோசமான நயவஞ்சகத் தனம் என்றும் கூறினார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s