பிரித்தானியாவை தண்டிக்கிறதா பிரான்ஸ்? போக்குவரத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள்

dover trafficலண்டன்: பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான எல்லைப்பகுதியில் அமைந்துள்ள Dover துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்பால் பிரித்தானிய பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார், 250,00 வாகனங்கள் சுமார் 20 மணிநேரமாக நின்றுகொண்டிருக்கின்றன. மேலும், ஆயிரிக்கணக்கான சுற்றுலாவாசிகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் Kent பொலிசார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வந்த போதிலும், போக்குவரத்து சரிசெய்தபாடில்லை.

அதுமட்டுமின்றி, வாகன நெரிசலில் சிக்கியுள்ளவர்களுக்கு, ஹெலிகொப்டர் உதவியுடன் 11,000 தண்ணீர் போட்டில்கள் கொடுக்கப்பட்டுள்ளன, சுமார் 10 மைல் தொலைவிற்கு வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பிரித்தானிய மக்கள் ஸ்தம்பித்துள்ளனர்,

தற்போது இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவியதைத்தொடர்ந்து, அடுத்த கேள்வியும் எழுந்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகியதால், பிரான்ஸ் மக்கள், பிரித்தானிய மக்களை தண்டிப்பதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாகளா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

dover traffic

ஆனால், சமீபத்தில் பிரான்சில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் எதிரொலியின் காரணமாக, இந்த எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதிகமாக A2, A20 மற்றும் M20 ஆகிய நெடுஞ்சாலைகளில் இந்த பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது எனவும் Dover துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகமான இடையூறால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று தெரியும் ஆனால், பாதுகாப்பு என்பது தலையாய கடமை ஆகும் என கூறியுள்ளனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s