‘தார்மீக பொறுப்புள்ள கமத்தொழில், நோயற்ற மக்கள்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வு

  • எம் எச் எம் அன்வர்

ds kattankudyகாத்தான்குடி: இயற்கையை நேசிக்கக் கூடிய மற்றும் மரங்களை பாதுகாக்கக் கூடிய சந்ததிகளை இப்போதிருந்தே நாம் உருவாக்க கடமைப்பட்டுள்ளோம் இவ்வாறு தார்மீக பொறுப்புள்ள கமத்தொழில் நோயற்ற மக்கள் எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி 167 பி பிரதேசத்தில்  நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் தெரிவித்தார். சூழல் பாதுகாப்பு தேசிய வீட்டுத்தோட்ட பயிர்களை நடுதல் வேலைத்திட்டத்தின் கீழ் இத்திட்டம் பிரதேச மட்ட ரீதியில் இடம்பெற்றது.

காத்தான்குடி திவிநெகும அபிவிருத்திப்பிரிவின் உத்தியோகத்தர் எம் எஸ் எம் அப்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாம் இன்று இருக்கின்ற மரங்களை அழித்து வீடுகள் கட்டுமாணங்களை கட்டுகின்றோம் அதனால் சுத்தமான காற்று கிடைப்பதில்லை சுத்தமான காய் கறிகள் பழங்களை பெறமுடிவதில்லை அதிக உஷ்ணம் காரணமாக வீடுகளுக்குள் குளிரூட்டிகள் இல்லாது வசிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது இது மிகவும் துரதிரஷ்டவசமாகும்.

ds kattankudy

இயற்கையை நேசிக்க பழகிக்கொள்ள வேண்டும் மரங்களை வைத்து கட்டுமாணப்பணிகள் அமைக்க திட்டமிட வேண்டும் அத்துடன் வீடுகள் கட்டுமாணங்களுக்கு மேல் பகுதியில் சிறிய அளவிலான வீட்டுத் தோட்ட பயிர்களை நட்டு அதன்மூலம் சுத்தமான பயிர்களை பெற்றுக்கொள்ள முடியும் அத்துடன் உடற்பயிற்சியும் கிடைக்கும் இதற்காக அரசாங்கத்தினால் வெட்டப்படுகின்ற தாவரங்களுக்கேற்ப அதேயளவான தாவரங்களை நடவேண்டும் எனும் வேலைத்திட்டத்தில் காடு வளர்ப்பு போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது இதற்காக எமது சந்ததிகளை இப்போதிருந்தே உருவாக்க கடமைப்பட்டுள்ளோம் இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்.

மேற்படிநிகழ்வில் காத்தான்குடி உதவிப்பிரதேச செயலாளர் ஏ சி அப்கர், போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார ஜயலால், திவிநெகும முகாமையாளர்களான திருமதி எஸ் எப் ஆர் பரீட், திரு வாமதேவன், எம் ஏ எம் சுல்மி, அபிவிருத்தி உத்தியோகத்தர் சுல்பிகார் மற்றும் திவிநெகும பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s