-
பெருநாள் திடல்தொழுகை
ஏறாவூர்: வழமைபோன்று இவ்வருடமும் ஏறாவூர் சகோதரர்கள் நபி வழியில் தமது பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத்தினால் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், அனைவரும் வுழுவுடனும், முஸல்லாவுடனும் வருகை தந்து தமது தொழுகைளை நிறைவேற்றிக் கொள்ளவருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
-
சுவிட்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களுக்கு இந்தியா செல்லத்தடை
சூரிச்: அரசியல் தஞ்சம் கோரி சுவிட்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களுக்கு இந்தியா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சுவிட்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்து நீலநிற கடவுச்சீட்டை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
-
9/11 தாக்குதல்: சவுதி மீது வழக்கு தொடுக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஆதரவு
வாஷிங்டன்: அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க வழிசெய்யும் மசோதவுக்கு, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அவை ஆதரவு வழங்கியுள்ளது. இந்தச் சட்டமூலம் அதிபரால் நிராகரிக்கப்படலாம் எனும் அச்சுறுத்தல் இருந்தாலும், பிரதிநிதிகள் அவை இந்த ஆதரவைத் தெரிவித்துள்ளது.
-
காத்தான்குடி பொது நூலகத்திற்கான நூல்கள் சேகரிப்பு திட்டம்
காத்தான்குடி: படித்தலில் ஆர்வமுடைய அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்ததுதான் பொது நூலகமாகும். காத்தான்குடியில் 1975ம் ஆண்டிலிருந்து (41 ஆண்டுகளாக) இயங்கிவரும் பொது நூலகமானது, கடந்த காலங்களில் காத்தான்குடி பிரதேச சபையினால் நிர்வகிக்கப்பட்டு வந்ததோடு, தற்போது காத்தான்குடி நகர சபையினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
-
அறபா நோன்பும் துல்ஹஜ்மாத ஏனைய அமல்களும்
இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பத்து இரவுகள் என்பது துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களாகும்- இப்னு அப்பாஸ், இப்னு ஸுபைர் மற்றும் முஜாஹித் (ரலி) ஆகி யோரும் இதையே கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : துல் ஹஜ் மாதத்தின் பத்துநாட்களும் அவற்றில் செய்யும் அமல்களும்தான் அல்லாஹ் விடத்தில் மிகவும் மகத்துவம் உடையதாகவும் பிரியமானதாகவும் உள்ளது! இதுபோல் வேறு எந்நாட்களும் இல்லை! எனவே இந்நாட்களில் லா இலாஹ இல்லல்லாஹ் – அல்லாஹு அக்பர் – அல்…
-
“பயப்பட வேண்டாம் நாங்கள் ஏதாவது செய்வோம்”- ரைனோருக்கு கோத்தபாய ஆறுதல்
கொழும்பு: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மஹிந்த அரசாங்கத்தில் மிகவும் வலுவான உறுப்பினராகவும், ராஜபக்ஷ ரெஜிமென்டுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் துமிந்த சில்வா இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்தவை காப்பாற்றும் முயற்சியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளதாக இரகசியத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
-
அறிமுகமான புதிய ஐ ஃபோன் 7உம் புதிய வசதிகளும்
லண்டன்: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐ ஃபோன் 7-ல், வழக்கமாக மற்ற செல்பேசிகளில் உள்ளதைப் போன்று, ஹெட்ஃபோன் எனப்படும் காதுகளிலில் பொருத்திக் கேட்கும் சாதனத்தை இணைக்கும் வசதி இருக்காது. ஹெட்ஃபோன் சொக்கெட் என்ற இணைப்பைப் பொருத்தும் இடத்தில், மற்ற பாகங்களைப் பொருத்த முடியும் என்று அப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. இந்த முடிவால், வயர் இணைப்பு இல்லாத, காதுகளில் பொருத்திக் கேட்கும் வசதிகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க இந்த தைரியமான முடிவு வழிவகுக்கும் என அந் நிறுவனம் கருதுகிறது.
-
“காத்தான்குடி எல்லா ஊர்களுக்கும் முன்மாதிரியான ஒரு ஊராகும்”- உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர்
எம் எச் எம். அன்வர் காத்தான்குடி: நாம் இவ்வுலகில் வாழ்ந்து மரணிப்பதற்கிடையில் ஏதாவது நல்ல காரியம் ஒன்றை செய்து விட்டுச் செல்வோம். இவ்வாறு (04.09.2016) இடம்பெற்ற பிரமுகர்கள் மாநாட்டின்போது இலங்கை ஜமாஅத் ஏ இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர் தெரிவித்தார். காத்தான்குடி சம்மேளன கேட்போர்கூடத்தில் “வாழ்வின் என்நிலையிலும் திக்ர் வளர்ந்ததொரு சமூகத்தின் பிக்ர்” எனும் தலைப்பில் இடம்பெற்ற நிகழ்வின்போதே இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்,
-
காணாமல் போன வர்த்தகருக்கு விளக்கமறியல்
திருகோணமலை: கடந்த செப்டெம்பர் 04 ஆம் திகதி காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பண்டாரகம, அட்டுலுகம மாரவவைச் சேர்ந்த மொஹமட் நஷ்ரீன் எனும் 35 வயது வர்த்தகருக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.. குறித்த நபர் இன்று (07) காலை, பஸ் ஒன்றின் மூலம் பலங்கொட ஹல்துமுல்லவிற்கு செல்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய, வழியில் வைத்து அவர் பொலிஸார் கைது செய்யப்பட்டார்.
-
நாமல் ராஜபக்ஷவின் அட்டகாசம்!
கொழும்பு: நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான ஃபோர்ட் ரக மோட்டார் கார், பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வாகனத்தின் மூலம் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி சாரதி சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
-
புற்றுநோய்க்காக நிதியுதவி கோரியுள்ள மஹேல!
கொழும்பு: காலி கராப்பிட்டிய சிகிச்சை மத்திய நிலையத்தை அமைப்பதற்காகவும், இலங்கையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள புற்று நோயாளர்களின் சிகிச்சையின் பொருட்டும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்த்தன நிதியுதவியைக் கோரியுள்ளார்.தனது டுவிட்டர் வலைத்தளம் மூலம் இவர் இந்த நிதியுதவியைக் கோரியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
-
காணாமல் போன வர்த்தகர் நஸ்ரின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்!
திருகோணமலை: தங்க நகை விற்பனைக்காக பண்டாரகம பிரதேசத்தில் இருந்து திருகோணமலைக்கு ஒரு கோடி ரூபாயுடன் சென்ற வர்த்தகர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயிருந்தார்.அவரைத் தேடுவதற்கு பொலிஸ் விசேட குழுக்கள் 5 நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வர்த்தகர் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக பொலிஸ் தரப்பை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.