நாமல் ராஜபக்ஷவின் அட்டகாசம்!

namalகொழும்பு: நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான ஃபோர்ட் ரக மோட்டார் கார், பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வாகனத்தின் மூலம் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி சாரதி சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

“எனது கால் உடைந்த நிலையில் இரண்டு வருடம் இருந்தேன்… கோத்தபாய ராஜபக்ச எனக்கு ஒரு வீடு பெற்று தருவதாக கூறினார். மனைவியின் வங்கி கணக்கில் 5 லட்சம் வைப்பு செய்யப்பட்து. ஒரு வருடத்திற்கு வாடகைக்கு வீடு ஒன்றை பெற்றுக் கொடுத்தனர். அதன் பின்னர் ஒன்றையும் மேற்கொள்ளவில்லை. வழக்கிற்கு என்ன நடந்ததென தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாமலுக்கு சொந்தமான Ford Mustang ரக வாகனம், நாரஹென்பிடியில் வைத்து முச்சக்கர வண்டியொன்றை மோதி விபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் 2014ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி இடம்பெற்றுள்ளது. விபத்து சம்பவத்தின் போது குறித்த வாகனம் இலக்க தகடு இன்றி பயணித்துள்ளது. இதன்போது நாரஹென்பிட்டிய பேஸ்லைன் வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதுண்டு விபத்துக்குள்ளானதாக பொலிஸ் பிரிவு நேற்று கடுவெல நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்த எம்.ஏ.ஹர்ஷ புஷ்பகுமார என்பவர் நேற்று நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு சென்று மோட்டார் வாகனத்தை அடையாளப்படுத்தியுள்ளார். குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்ற போது, அப்போது ஆட்சியில் பலமாக இருந்த நாமல் ராஜபக்ஷ, கோத்தபாயவின் அனுசரனையுடன் சிறப்பு அதிரடி படையினரை கொண்டு மோதுண்ட வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s