Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் அமர்வு

    நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் சகோதரர் அப்துர் றஹ்மானுக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சகோதரர் ஷிப்லி பாரூக்கிற்குமிடையே “நகர சபை ஊழல்களுக்கு ஷிப்லி பாரூக் துணை போனாரா?” எனும் தலைப்பில் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் அமர்வு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் ஜும்ஆ பள்ளிவாயலில் நேற்றிரவு (02.09.2016) நடைபெற்றது. இதன் முழுமையான வீடியோ இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

  • சுலைமான் கொலை: வாயில் ஒட்டிய பிளாஸ்டரை கழற்றிய போது…..

    கொழும்பு: வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் காதுப்பகுதியில் இரும்புக் கம்பியால் தாக்கி, கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு, வாயில் பிளாஸ்டர் ஒன்றையும் ஒட்டியுள்ள கடத்தல்காரர்கள், அவரை மாவனெல்ல பகுதிக்கு அழைத்துச் சென்று, கப்பம் கேட்பதற்காக சொத்து விவரங்களை அறிந்துகொள்ள, வாயிலிருந்த பிளாஸ்டரைக் கழற்றிய போது, அவருடைய நாக்கு தொங்கியுள்ளது. அதனையடுத்தே அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்ற விடயத்தை, கடத்தல்காரர்கள் அறிந்துகொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

  • சவுதியிலிருந்து வந்த ஆபத்தான வைரஸ்!

    கொழும்பு: சவுதி அரேபியாவில் உயிரிழந்த நிலையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சடலம் தொடர்பில் மர்மம் நிலவுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதியில் சாரதியாக பணியாற்றிய நிலையில் திடீரென உயிரிழந்த இலங்கையர், நாட்டுக்கு சடலமாக கொண்டு வரப்பட்டுள்ளார். எனினும் அந்த உடலை பிரேத பரிசோதனை உட்படுத்த நீர்கொழும்பு பிரதான சட்ட வைத்தியர் எம்.என்.ராகுல் ஹக் நிராகரித்துள்ளார்.

  • “கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம்” ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைப்பு

    காத்தான்குடி: புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க “கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின்” கீழ் உள்வாங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட வேலைத்திட்டங்கள் வெள்ளிக்கிழமை (2) இராஜாங்க அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

  • துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகள் (வீடியோ)

    வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

  • காத்தான்குடி பிரதான வீதி, விபத்துக்களைத் தடுப்பதற்கான பிரதான ஆலோசனைகள்

    ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பொறியியலாளர் முகமட் சிப்லி, பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான், மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு, அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் காத்தான்குடி பிரதான வீதியில் அண்மைக்காலமாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் பாதசாரிகள் மற்றும் வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கு பின்வரும் ஆலோசனைகளை “யுவர்காத்தான்குடி” தங்களுக்கு முன்வைக்கிறது.

  • “அவன்கார்ட் வியாபாரம் எம்முடையதே” – மகிந்த

    கொழும்பு: அவன்கார்ட் வியாபாரத்துக்கு அனுமதி வழங்கியது தாமே என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவன்கார்ட் விவகாரம் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட 8 பேருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பணை விடுத்துள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு மஹிந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

  • “விடுதலைப் புலிகள் பணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பினார்கள்”

    கொழும்பு: இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது, பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு பணம் கொடுத்து, 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். காணமால் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.

  • கனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைப்பு

    வவுனியா: வவுனியா கனகராயன்குளத்தில் அதிரடிப்படையினர் வணங்கி வந்த புத்தர் சிலையை அடையாளம் தெரியாதவர்கள் அடித்து நொறுக்கியிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இச் சம்பவம் நடைபெற்றதாக கனகராயன்குளம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடைந்த சிலையின் துண்டுகள் பாகங்களையும் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர்.

  • 75 இலட்சம் ரூபா நிதியொதிக்கீட்டில் ஓட்டமாவடியில் புதிய பஸ் தரிப்பிடம்

    எம்.ரீ. ஹைதர் அலி ஓட்டமாவடி: கிழக்கு மாகாண சபையினால் பிரதேச மக்களுக்கான சேவைகளை மேம்படுத்தும் நோக்குடன் 2016ஆம் ஆண்டுக்கான நெல்சிப் திட்டத்தின் கீழ் கோறயைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையினால் எழுபத்தைந்து இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள மிக நீண்ட நாள் தேவையாக இருந்த புதிய பஸ் தரிப்பிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2016.08.29ஆந்திகதி (திங்கட்கிழமை) ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

  • அமுலில் உள்ள (இஸ்லாமிய அல்ல) முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் அவசியம்!

    மஸிஹூதீன் இனாமுல்லாஹ் முஸ்லிம்களுக்கென தனியான விவாக விவாகரத்து சட்டங்கள், வாரிசுரிமை, வக்பு சட்டங்கள் இருப்பதனை எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் விட்டுக் கொடுக்கவோ சமரசம் செய்யவோ தயாரில்லை. ஆனால், இலங்கையில் அமுலில் உள்ள முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படல் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.

  • போதையில் விமானத்தை செலுத்த முற்பட்ட இலங்கை விமானி

    பிராங்பேர்ட்: கடந்த வாரம் ஜேர்மன்  விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு செல்ல தயாராக இருந்த விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதமாக சென்றடைந்தது. குறித்த விமானத்தை செலுத்த தயாராக இருந்த விமானி கடும் குடிபோதையில் இருந்தமையால் இந்த நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

←Previous Page
1 … 172 173 174 175 176 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar