“பயப்பட வேண்டாம் நாங்கள் ஏதாவது செய்வோம்”- ரைனோருக்கு கோத்தபாய ஆறுதல்

gota_duminda3கொழும்பு: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மஹிந்த அரசாங்கத்தில் மிகவும் வலுவான உறுப்பினராகவும், ராஜபக்ஷ ரெஜிமென்டுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் துமிந்த சில்வா இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்தவை காப்பாற்றும் முயற்சியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளதாக இரகசியத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

துமிந்த சில்வாவின் சகோதரான ரைனோர் சில்வாவின் கோரிக்கைக்கு அமைய, கோத்தபாய இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து அவசரமாக தொலைபேசி அழைப்பின் மூலம் கோத்தபாய – ரைனோர் உரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது “பயப்பட்ட வேண்டாம் ரைனோர் நாங்கள் ஏதாவது செய்வோம். நாங்கள் மாலை மஹிந்தவை சந்திப்போம். நீங்கள் மீரீஹான வீட்டிற்கு அல்லது விஜேராமவுக்கு வாருங்கள்.

இந்த தீர்ப்பு தொடர்பில் நாங்கள் அப்பீல் செய்ய முடியும்… அங்கு நாங்கள் அனைத்தையும் மாற்றிக்கொள்வோம். உடதலவின்ன வழக்கில் இருந்து ரோஹானை விடுவித்ததனை போன்று இதனை நிறைவு செய்வோம். துமிந்தவுக்கு நல்ல எதிர்காலம் ஒன்று உள்ளது. நாங்கள் எப்படியாவது வெளியே எடுப்போம். நான் பாரதவின் மரண வீட்டிற்கு செல்லவும் இல்லை. ஹிருணிக்காவின் முகத்தை ஒரு முறையேனும் பார்த்ததில்லை. துமிந்த ஒரு நல்லவர்.

gota_duminda3

தற்போதைய அரசாங்கம் மிகவும் ஆபத்தாக உள்ளது. என்னையும் கைது செய்ய துறத்துகிறார்கள் என கோத்தபாய தெரிவித்துள்ளார்.கோத்தபாயவின் வார்த்தைகளால் ஆறுதல் அடைந்த ரைனோர், அடுத்த தேர்தலில் நீங்கள் போட்டியிடுங்கள். எங்கள் முழுமையான ஆதரவு உங்களுக்கு தான். கடந்த ஆட்சியில் துமிந்தவுடன் மிகவும் நெருக்கமான நட்பினை கொண்டிருந்தீர்கள்.

ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு துமிந்தவை அழைத்து வந்த போது நீங்கள் முதலில் வந்தீர்கள். வைத்தியசாலையை சுற்றி அதிரடிப்படையினரை ஈடுபடுத்தி பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தீர்கள். சிங்கப்பூர் கொண்டு செல்வதற்கும் விமான நிலையம் வரை பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்தீர்கள். பல வழிகளில் உதவி செய்யத உங்களுக்கு எப்போதும் துணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.இந்த உரையாடலுக்கமைய துமிந்த சில்வாவுக்காக கோத்தபாய மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் சட்டரீதியான களமிறங்குவதற்கு தயாராகி வருவவதாகவும் இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s