-
அதிகமான பாலியல் துஷ்பிரயோகங்கள் சுய விருப்பத்துடன் நடப்பவை
கொழும்பு: பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகளில் 65 சதவீதமானவை பெண்களின் சம்மதத்துடன் நடப்பவை என பொலிஸ் பகுப்பாய்வு புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. அப் புள்ளிவிபர தகவலின் படி 2016 ஆம் ஆண்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் மொத்தமாக 2036 ஆகும். இதில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களின் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் 350ம், 16 வயதிற்குட்பட்ட பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் 1686ம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
-
சிங்களமயமாகும் கிழக்கின் அரச நிர்வாகம்-அதிர்ச்சித் தகவல்
எஸ். ஆறுமுகம் கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள பல முக்கிய அரச நிறுவனங்களின் முக்கிய பொறுப்புக்களை வகிக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் அதிகாரிகளை பதவி நீக்கி சிங்கள அதிகாரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுனர் முன்னெடுத்து வருகின்றார். உயர் பதவிகளை வகிக்கும் பல தமிழ் மற்றும் முஸ்லிம் அதிகாரிகளுக்கு உத்தியோகப்பற்ற்ற்ற வகையில் கிழக்கு மாகாண ஆளுனரினால் அவர்களை பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையில் உயரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரியொருவர் கூறினார்.
-
நவீன உலகில் உளவியல் தாக்கம்
(youtube)
-
பாகிஸ்தான் செல்ல மறுக்கும் இலங்கை முன்னணி வீரர்கள்
டுபாய்: இலங்கை T 20 அணியின் தலைவர் உபுல் தரங்க மற்றும் தினேஷ் சந்திமால், மலிங்கா, ஏஞ்சலோ மத்யூஸ் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இலங்கை அணியின் திட்டமிட்ட பாகிஸ்தான் பயணத்தில் இருந்து விலகுவார்கள் என தெரியவந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பேருந்து 2009-ல் லாகூரில் தாக்கப்பட்ட பிறகு அவர்கள் முதல்முறையாக பாகிஸ்தானில் விளையாடுவார்கள் என்றும், பாகிஸ்தானில் எடுக்கப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முழுமையாக திருப்தி அடைந்த பிறகே இம்முடிவை எடுத்ததாக திங்களன்று இலங்கை கிரிக்கட் கூறியிருந்தது.
-
“உலமா சபையை இப்ப யார் வச்சிருக்கா…?”
இர்ஷாட் ஏ. காதர் காத்தான்குடி: ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஆரோக்கியத்துக்காக நேற்று (17) இஷாத் தொழுகையின் பின்னர் காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பள்ளிவாயலில் “துஆ”ப் பிரார்த்தனை ஒன்று இடம்பெற்றது. இந்த துஆப் பிராத்தனைக்கான அழைப்பை ராஜாங்க அமைச்சரின் விசுவாசிகள் சிலர் முகநூலில் பதிவு செய்திருந்தனர்.
-
மின்விசிறிகளைப் பயன்படுத்தியும் கைவிடப்பட்ட முக்கிய போட்டி
MJ ஹைதரபாத்: இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையிலான 3வது இருபது-20 போட்டி நேற்று 13 வெள்ளிக்கிழமை ஹைதரபாத் ராஜீவ் காந்தி சர்வதேசக் கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற இருந்தது. தொடர்ந்து ஐந்து நாட்களாக ஹைதரபாத்தில் மழைபெய்து வந்த நிலையில் எப்படியாவது இப்போட்டியை நடாத்துவதற்கு இந்திய கிரிக்கட் வாரியம் அதிகப் பிரயத்தனம் எடுத்தது.
-
அறிவுக் களஞ்சியம் பரிசளிப்பு விழா – 2017
எம்.எஸ்.எம்.ஸாகிர் கொழும்பு: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் 1972ஆம் ஆண்டிலிருந்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியான அறிவுக்களஞ்சியத்தின் மற்றுமொரு தேசிய ரீதியிலான பரிசளிப்பு விழா கடந்த 05ஆம் திகதி கூட்டுத்தாபன ஆனந்த சமரக்கோன் கலையரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
-
அபுல் ஹஸன் ஆசிரியர் காலமானார்
காத்தான்குடி: காத்தான்குடி 3ம் குறிச்சி, மெத்தைப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் அபுல் ஹஸன் இன்று மாலை காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் முபீனா ஆசிரியை, பரீனா, றிபாய் (கட்டார்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
-
பாடசாலை மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு நூறு ரூபாய் வழங்கும் திட்டம்
கொழும்பு: வறுமை மற்றும் பிற காரணங்களினால் பள்ளிக்கூடம் செல்லாத மாணவர்களுக்கு மாதம்தோறும் சிறப்பு கொடுப்பணவு வழங்குவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் கவனம் செலுத்தி வருகின்றது. அடுத்த வருடம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் ஊடாக மாணவர்கள் இடை விலகல் தடுக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களின் கல்வி ஆர்வத்தையும் அதிகரிக்க முடியும் என கல்வி அமைச்சகம் எதிர்பார்க்கின்றது.
-
“காத்தான்குடி மானம் போய்விட்டது…”
இர்ஷாட் ஏ. காதர் காத்தான்குடி: ஒக்டோபர் தொடங்கியதிலிருந்து காத்தான்குடி மானம் போய்விட்டதாக அங்குமிங்கும் ஒரே சலசலப்பு! உயர்ந்த கோட்டை மதில் சுவருக்குள் பெண்களைக் கட்டிவைத்தாலும் சமூகவலைத்தளங்களின் ஊடாக தன் குடும்பத்தில் ஒரு அங்கத்தவனாக உள்நுழைந்துகொள்கிறான் “அந்நியன்”. ஸ்மார்ட் ஃபோன்களை தங்களது பெண்பிள்ளைகளுக்கு வழங்ககக்கூடாது என்பதைவிட வாங்கிக்கொடுப்பதில்தான் ஏழை முதல் பணக்காரப் பெற்றோர்களின் நிலை இருக்கிறது.
-
5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை: நீர்கொழும்பு மாணவன் முதலிடம்
கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன. புலமைபரிசில் பரீட்சையில் நீர்க்கொழும்பு ஹரிச்சந்திர மகா வித்தியாலயத்தின் தினுக கிரிஷான் குமார என்ற மாணவன் இம்முறை 198 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
-
தண்ணீர் கேட்டு, பெண்களைப் பலவந்தப்படுத்தும் முயற்சியில் காமுகர்கள்
AK-48 காத்தான்குடி: காத்தான்குடியில் தனிமையில் இருக்கும் பெண்களைக் குறிவைத்து ஒரு காமுகர் கூட்டம் களத்தில் இறங்கி இருக்கின்றது. வீட்டுக்கதவைத் தட்டி, தண்ணீர் தர முயுமா என கேட்கின்றனர். தண்ணீர்தானே கேட்கின்றனர் என உதவும் நோக்கில் தண்ணீரை கையில் கொடுக்கும்போது, இப்பெண்களை பலாத்கார முயற்சியிலீடுபடுத்தும் நடவடிக்கையில் இக்காமுகர் கூட்டம் ஈடுபடுகின்றது.