தண்ணீர் கேட்டு, பெண்களைப் பலவந்தப்படுத்தும் முயற்சியில் காமுகர்கள்

  • AK-48

kattankudyகாத்தான்குடி: காத்தான்குடியில் தனிமையில் இருக்கும் பெண்களைக் குறிவைத்து ஒரு காமுகர் கூட்டம் களத்தில் இறங்கி இருக்கின்றது. வீட்டுக்கதவைத் தட்டி, தண்ணீர் தர முயுமா என கேட்கின்றனர். தண்ணீர்தானே கேட்கின்றனர் என உதவும் நோக்கில் தண்ணீரை கையில் கொடுக்கும்போது, இப்பெண்களை பலாத்கார முயற்சியிலீடுபடுத்தும் நடவடிக்கையில் இக்காமுகர் கூட்டம் ஈடுபடுகின்றது.

மோட்டார் சைக்கிளில் குறைந்தது இருவராவது வரும் இவர்கள், குறிப்பாக திருமணமான, தனிமையில் இருக்கும் பெண்களை குறிவைப்பதாக முதற்கட்ட எமது ஊடக விசாரணையில் தெரியவருகிறது.

kattankudy beach

தண்ணீர் கிளாசைத் தட்டிவிட்டு, முந்தானையைப் பிடித்து இழுத்து,  தங்களது ஆசைக்கு இணங்கவைக்க எடுத்த பல்வேறு சம்பவங்கள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன.

தொழில் நிமித்தம், வெளிநாடுகளில், வெளியூர்களில் இருப்போர், நிரந்தர நேர அட்டவணைப்படி உள்ளுரில் தொழில்புரிவோர், உத்தியோகத்தர்கள் போன்றவர்களின் வீடுகள் இலக்குவைக்கப்படுகின்றன.

இதைவிடவும், 4 வயதுச் சிறுமியும், 70 வயது மூதாட்டியும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதும் வெட்கித் தலைகுணியவேண்டிய விடயம்.

யார் இவர்கள்?

எம் ஊரைச் சேர்ந்தவர்களா?

“கிரீஸ்” மனிதன் போன்ற அரசாங்க திருவிளையாடல்களில் ஒன்றா..?

அல்லது மன நோயாளிகளா..? என்பதைக் கண்டறியும் அடுத்தகட்ட நடவடிக்கையில் நாம் இறங்கி இருக்கின்றோம்.AK-48

இவ்விடயத்தில் தயவுசெய்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு யுவர்காத்தான்குடி கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s