“காத்தான்குடி மானம் போய்விட்டது…”

  • இர்ஷாட் ஏ. காதர்

kattankudy_01காத்தான்குடி: ஒக்டோபர் தொடங்கியதிலிருந்து காத்தான்குடி மானம் போய்விட்டதாக அங்குமிங்கும் ஒரே சலசலப்பு! உயர்ந்த கோட்டை மதில் சுவருக்குள் பெண்களைக் கட்டிவைத்தாலும் சமூகவலைத்தளங்களின் ஊடாக தன் குடும்பத்தில் ஒரு அங்கத்தவனாக உள்நுழைந்துகொள்கிறான் “அந்நியன்”.

ஸ்மார்ட் ஃபோன்களை தங்களது பெண்பிள்ளைகளுக்கு வழங்ககக்கூடாது என்பதைவிட வாங்கிக்கொடுப்பதில்தான் ஏழை முதல் பணக்காரப் பெற்றோர்களின் நிலை இருக்கிறது.

காத்தான்குடிக்குள் நுழையும் தொழிலாளர்களில் இருந்து, கல்லூரிவரைக்கும் கல்லக்காதல், கள்ளத் தொடர்புகள் திருமணமானவர்களையும் விட்டுவைக்கவில்லை.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 2000ஆம் ஆண்டுவரைக்கும் ஊருக்காகப் பாடுபட்டது. இதன்பின்னர் அரசியல்வாதியின் கைக்குழந்தையாக மாறி, பொன்னாடை போர்த்துவதிலும், சமூக விடயங்களில் அக்கறையற்றும், உழ்ஹிய்யா, பேரீத்தம்பழ விநியோகத்தில் மோசடிகள் இடம்பெற்றிருந்தமைக்கும் பெயர்போனநிலையில் பரிதாபமாக இருக்கின்றது.

பிரச்சினைக்குரிய திருமண விடயங்களை விசாரிப்பதில், மணமகளின் தந்தை சம்மேளனக் கட்டடத்திற்குள் வைத்தே தாக்கப்படும் அளவுக்கு, பக்கக்சார்பான விடயங்களும் அங்கு இடம்பெற்றுவருகின்றன.

கடந்த சனிக்கிழமை இரவு இளைஞர்களால் மடக்கிப்பிடிபட்ட கள்ளக் காதலர்கள் விடயத்தில் சம்மேளனம் அவசரப்பட்டு “தீர்ப்பு” வழங்கியதன் பின்னர் அசம்பாவிதங்கள் சில ஊரில் இடம்பெற்றிருந்தன.

சம்மேளனத்தின் யாப்பு விதிமுறையை பொதுமக்களுக்கு சம்மேளனம் முதலில் தெரியப்படுத்த வேண்டும்.

இல்லையெனில் எந்தப் பிரச்சினைக்கு யாரிடம் போவது என்பது பற்றி மக்களுக்குத் தெளிவில்லாமல் போகும்.

ஊர் இப்போதிருக்கும் நிலையில், வட்டியைவிட விபச்சாரம் அதிகரித்திருக்கிறது.

ஒரு நாளைக்கு XXX கேசாவது இடம்பெறுகிறது. இவ்விடயம் பற்றி சம்மேளனம் அசமந்தப்போக்கைக்கையும், அரசியல், அந்தஸ்த்து சார்ந்த போக்கையும் மேலும் கடைப்பிடித்தால் பொலிஸ் நிலையத்தையே மக்கள் நாடிச் செல்வர்.

இது இப்படியிருக்க,

குறித்த விடயத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர்களை சமூகவலைத்தளங்களில் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

இவ்விளைஞர்களின் பெற்றோர்களையும் சம்பந்தமில்லாமல் இவ்விடயத்தில் சேர்த்துவருகின்றனர்.

1990 களில் ஓர் இளைஞர் அணிதான் ஊருக்காக தங்களை அர்ப்பணித்தது.

பணக்காரன், கௌரவரம் என்று பேசுகின்ற இன்று பலர் அன்று கொழும்பிலும், ஏனைய பிரதேசங்களிலும் சுகமாக வாழ்ந்தவர்கள்.

இதே போல் 2000 ஆம் ஆண்டுகளின் பின்னரும் ஊரில் இளைஞர் அணி உருவானது.

kattankudy_01

வெள்ளி, டிசம்பர் 15, 2006- அரசாங்க சொத்து காத்தான்குடியில் எரிக்கப்பட்டு ஊருக்குப் ‘பெருமை’ சேர்த்தபோது…..YKK (Image-Google)

பின்னர் மார்க்கத்தின் எழுச்சி என்ற போர்வையில் வீடுகளைக் கொள்ளையடித்து, தீ வைத்துக் கொளுத்தி அவர்களில் சிலர் குளிர் காய்ந்தனர். அவர்கள் பலர் சம்மேளனத்திலும், இன்னும் பிற அமைப்புக்களிலும் அங்கத்துவமாக இருக்கின்றனர்.

வீடெரிப்புக்கும், கொள்ளையடிப்புக்கும் பெற்றோல் கலனும், இரும்புக்கம்பியும் தூக்கித்திரிந்த பலர், இன்று “ஊர் மானம்” போய்விட்டதாக கொப்பளிக்கின்ற இடம்தான் இந்த சமூக வலைத்தளம்.

சமூகவலைத்தளங்களில் நல்லபெயர் எடுத்துக்கொண்டு, ஊரை வாழ வைப்பதாக எண்ணிக்கொண்டிருக்கும் பலருக்கு பின்னால் பற்பல சரித்திரங்கள் மறைந்திருக்கின்றன.

ஊருக்கு சம்மேளனம் தேவை. அது 1990களில் இயங்கிய சம்மேளனம் போல் இயங்க வேண்டும்.

இளைஞர் அணியும் ஊருக்குத் தேவை. கட்டுக்கோப்பான அணியாக இருக்க வேண்டும்.

எமது ஊர் பெண்களைச் சூழ்ந்திருக்கின்ற ஆபாச ஆபத்துக்கள் துடைத்தெறியப்பட வேண்டும்.

அமெரிக்கா, லண்டன் என தனிமையில் உலகம் சுற்றும் மகளிர் அமைப்புக்களின் தலைவிகள், சமூகத்தைக் காட்டிக்கொடுக்காமல் சமூகத்தின் அக்கறையாளர்களாகத் திகழ வேண்டும்.

எமது பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

  • யுவர்காத்தான்குடிக்காக இர்ஷாட் ஏ. காதர்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s