அறிவுக் களஞ்சியம் பரிசளிப்பு விழா – 2017

  • எம்.எஸ்.எம்.ஸாகிர்

arivu kalanchiyamகொழும்பு: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் 1972ஆம் ஆண்டிலிருந்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியான அறிவுக்களஞ்சியத்தின் மற்றுமொரு தேசிய ரீதியிலான பரிசளிப்பு விழா கடந்த 05ஆம் திகதி கூட்டுத்தாபன ஆனந்த சமரக்கோன் கலையரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

முஸ்லிம் சேவைப் பணப்பாளர் அல் – ஹாபிழ் எஸ். முஹம்மது ஹனிபா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு அஷ்ஷெய்க் முஹம்மது அஷ்ரப் நளீமி பிரதம அதிதியாகவும் கூட்டுத்தாபனத் தலைவர் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன, உலக அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீது, இஸ்லாமிக் புக் சென்டர் சார்பாக ரீ.எல்.எம். ஜெம்சித், எம்.எச்.எம்.ஹஸன் அதன் முகாமையாளர் முஹம்மத் கியாஸ் உட்பட உலமாப் பெருமக்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் திரண்டிருந்தனர்.

arivu kalanchiyam.jpg1

விசேட அதிதியாக அறிவுக் களஞ்சியம் நிகழ்ச்சியை முதன் முதலில் நடத்திய பெருமைக்குரிய ராவுத்தர் நெய்னா முஹம்மத், முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் எம். இசட் அஹமத் முன்னவர் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

நிகழ்ச்சிகளுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் திருமதி மதுரியும் கலந்து கொண்டார்.

arivu kalanchiyam.jpg2

இறுதிப் போட்டியில் முதலாம் இடத்தை கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயம் பெற்றுக் கொண்டது. இரண்டாம், மூன்றாம் இடங்களை முறையே கொட்டாரமுல்லை அல் – ஹிறா மகாவித்தியாலயமும் துந்துவ முஸ்லிம் மகாவித்தியாலயமும் தனதாக்கிக் கொண்டன.

இந்நிகழ்வின் போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் சுதர்ஷன குணவர்தன ராவுத்தர் நெய்னா முஹம்மத் மற்றும் அறிவுக் களஞ்சியம் நிகழ்ச்சியை கடந்த 18 வருடங்களாக தொடர்ந்து நடத்திவரும் ஏ. ஆர்.எம். ஜிப்ரி ஆகியோர் உலக அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீதினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

arivu kalanchiyam

இதேவேளை உலக அறிவிப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீதின் ஒலிபரப்பு துறையின்50 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் எஸ். முஹம்மது ஹனிபா, அறிவிப்பாளர் ஏ. ஆர்.எம்.ஜிப்ரி ஆகியோரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

ஒன்பது மாகாண சம்பியன் அணிகளுக்கும் இவற்றில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அணிகளுக்கும் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வருகை தந்திருந்த அதிதிகள் வழங்கினர். இந்த நிகழ்வினை ஐடியல் வர்த்தக நிறுவனம் சிறப்பான முறையில் ஒழுங்கு செய்திருந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s