Category: Your Kattankudy
-
களவு போகும் உரிமைகள்….
– பிரகாசக்கவி பொழுது புலர்ந்த அதிகாலை பொழுதில் கடற்கரையில் என் வள்ளங்கள் களவு போயிருந்தன.
-
‘தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்கட்சி அரசியல் மட்டும் தான் செய்ய தெரியும்’ – அமைச்சர் ராஜித சேனாரத்ன
– இர்ஷாட் ரஹ்மதுல்லாஹ் மன்னார்: இலங்கைக்கு வருகைத் வருகைத்தந்த நவநீதம் பிள்ளைஇஇலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் துரித அபிவிருத்திகளை பாராட்டியுள்ளதானது இந்த நாட்டு மக்கள் ஜனநாயகமாக வாழ்வதை எடுத்துக் காட்டுவதற்கான அங்கீகாரமாக கடற்றொழில் மற்றும் நீரியள்வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன மன்னாரில் கூறினார்.
-
குழியில் விழுந்ததில் 05வயது சிறுவன் பலி: காத்தான்குடியில் சம்பவம்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: குழி தோண்டிக்கொண்டிருந்த வேளையில் குழியில் விழுந்து ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த 05வயது சிறுவன் பலியான சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் புதிய காத்தான்குடி விடுதி வீதி 03ம் குறுக்கு லேனில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவது,
-
வாகரை புதிய பனிச்சங்கேணிப் பாலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் வாகரை: மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட இலங்கை ஜனநாய சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு-திருக்கொண்டியாமடு –திருகோனமலை வீதியில் மஹிந்த சிந்தனை துரித கதி வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான்
-
வடமாகாணத்திற்கு 10,000 தமிழ் பொலிஸார்
– FM. பர்ஹான் கொழும்பு: வடமாகணத்தில் 10,000 தமிழ் பொலிஸாரை புதிதாக இணைத்துக் கொள்வதற்கான கோரிக்கையினை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்துள்ளார்.
-
நவநீதன் பிள்ளை புலி பயங்கரவாதத்தை கண்டிக்கும் போது மகிழும் அரசாங்கம்இ அரச பயங்கரவாதத்தை அவர் விசாரிக்க முனையும்போது கோபமடைய முடியாது – மனோ கணேசன்
– FM. பர்ஹான் கொழும்பு: ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளை புலிகளின் பயங்கரவாதத்தை கண்டித்துள்ளார். அது மட்டும் அல்ல. புலம் பெயர்ந்த தமிழர்கள் புலிகளை தொடர்ந்தும் போற்றி வாழ முனைய கூடாது எனவும் அவர் இலங்கை மண்ணில் இருந்து கூறியுள்ளார்.
-
ஒலுவில் துறைமுக திறப்பு விழா: ஒலுவிலில் ரவூப் ஹக்கீம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஒலுவில்: ஒலுவில் துறைமுகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செப்டம்பர் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ள நிலையில், துறைமுக நிர்மாணத்தினால் பாதிககப்பட்ட அப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி சம்மந்தப்பட்ட அமைச்சருக்கும், துறைமுக அதிகார சபை தலைவருக்கும் எடுத்து விளக்கி,
-
காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2014 ஆண்டு புதிய கல்வியாண்டிற்கு புதிய மாணவர் அனுமதி
– பழுலுல்லாஹ் பர்ஹான் காலி: இலங்கையில் தென் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2014 ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப் பிரிவு என்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு புதிதாக மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ. தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார்.
-
என்னிடம் தெரிவிக்காது பிள்ளையிடம் முறையீடு ஜனாதிபதி கடும் அதிருப்தி; விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஊடக அமைச்சருக்கு உத்தரவு
கொழும்பு: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் சிலர் அவர்களிடம் தெரிவித்துள்ள முறைப்பாடுகள் தொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தகவல்துறை அமைச்சர் கெஹலியவிற்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
-
இரக்கமற்ற புலிகள் அமைப்பிற்கு ஐ.நா.வில் ஒருபோதும் இடமில்லை புலம்பெயர் தமிழர் உணர்ந்துகொள்ள வேண்டும் – நவிபிள்ளை
கொழும்பு: ஐ. நா. மனித உரிமை ஆணையம் போன்ற மகி மைமிக்க உயர் நிறுவனத் திடம் புலிகள் போன்ற இரக்கமற்ற அமைப்புக்க ளுக்கு மரியாதை இருக்கும் என்று புலம்பெயர் தமிழர் கள் எதிர்பார்க்க முடியாது என ஐ. நா. மனித உரிமை கள் ஆணையாளர் நவநீ தம்பிள்ளை தெரிவித் துள்ளார்.
-
மேற்குலக அரசியல்வாதிகளுக்கு புலிகள் லஞ்சம்
கொழும்பு: தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய வலையமைப்புகள் பிரதான மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் கொடுத்து இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் அவர்களை ஈடுபடவைக்கின்றன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
சிரியா இரசாயன ஆயுதம் பயன்படுத்தியதாகச் சொல்வது முட்டாள்தனம்: புடின்
சிரியாவின் அரசாங்கம் டமஸ்கஸ் புறநகர்ப் பகுதி ஒன்றில் இரசாயன ஆயுதங்களைக் கொண்டுத் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டுவது அர்த்தமற்றது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறினார். சிரியாவின் அரசாங்கம் கிளர்ச்சிக்கார படைகளை எதிர்த்து அதிக வெற்றி பெறுவருகின்ற ஒரு நேரத்தில், மேற்குலக நாடுகள் சிரியா மீது இராணுவ