களவு போகும் உரிமைகள்….

boat– பிரகாசக்கவி

பொழுது புலர்ந்த
 அதிகாலை பொழுதில்

 கடற்கரையில்
 என் வள்ளங்கள் களவு போயிருந்தன.

அங்கும் இங்கும்
 அலைந்து தேடுகிறேன் .

சட்டன பெரும் சனக்கூட்டம்

 அப்படி இருக்கும் என்று
 ஒருவர் .

இல்லை இல்லை
 இப்படியாகி இருக்கும் என்று இன்னொருவர் .

இப்படியாய்
 பெரும் பட்டிமன்றம் தொடர்கிறது !

திரும்பிபார்கிறேன்
 அங்கே
 கடலும் களவு போயிருந்தது !

boat (2)

Published by

Leave a comment