“அநுராதபுர தேர்தல் பிரச்சார மைதானத்திற்கு 6 கோடியில் செங்கம்பள விரிப்பு: மஹிந்த நாசமாகப் போகிறார்”

mangalaஅநுராதபுரம்: அநுராதபுரம் சல்காது மைதானம் சுமார் 6 கோடி ரூபா செலவில் அவசர அவசரமாக புனரமைக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரச்சாரக்கூட்டம் நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிலையில், ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச என்ற மன்னர் அநுராதபுரத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொள்வதற்காக குறித்த மைதானம் சிவப்பு கம்பளத்தால் விரிக்கப்பட்டதை போன்று காபட் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 6 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக மங்கள சுட்டிக்காட்டினார். ஊழல்களும் துஸ்பிரயோகங்களும் மஹிந்தவின் ஆட்சியில் தலைவிரித்தாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மீன் தன்வாயால் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும். அதேபோல மஹிந்த ராஜபக்சவும் மூன்றாம் தவணை போட்டியிடுவதன் மூலம் நாசமாகப் போகிறார் என்றும் மங்கள தெரிவித்தார்.

மக்களின் பணத்தை கணக்கு வழக்கில்லாமல் தனது இஸ்டத்திற்கு செலவிட்டு அநியாயமாக இந்நாட்டை வழிநடத்தும் மஹிந்தவையும் அவருக்கு கூஜா தூக்கும் அரசியல் ‘வால்’களையும் ஒழித்துக்கட்ட வேண்டும் எனவும் கொழும்பு அரசியல் வட்டாரம் கொதித்தெழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment