ஷின்ஷியாங்: சீனாவின் மேற்குப் பகுதி மாகாணமான ஷின்ஷியாங் தலைநகரான, உரும்கி நகரில், பெண்கள் இஸ்லாமிய முகத்திரையை பொது இடங்களில் அணிந்து வருவதற்கு தடை விதிக்க அதிகாரிகள் உத்தேசித்திருக்கிறார்கள். இந்தத் தடையை ஆதரித்து உரும்கி நகர ஆட்சியாளர்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று அரச ஊடகங்கள் கூறின.
முஸ்லீம் உய்கர் இனத்தவர்களின் சொந்த மாகாணமான இந்தப் பகுதியில் இஸ்லாமிய உடைகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுவரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் இந்த நடவடிக்கையும் தற்போது வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்பகுதியில் நடந்த வன்செயல்களுக்கு இஸ்லாமியப் பிரிவினைவாதிகளே காரணம் என்று சீன அரசு குற்றம் சாட்டியிருந்தது. உய்குர் இன ஆர்வலர்களோ அரசின் அடக்குமுறையும், கலாசார சகிப்புத்தன்மையின்மையுமே இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணம் என்று கூறுகிறார்கள்.
Leave a comment