Category: Your Kattankudy
-
பெரிஸ்டர் நைனா மரைக்கார் பவுன்டேஷன் ஏற்பாடு செய்து நடத்திய மீலாதுன் நபி போட்டி
புத்தளம்: முன்னால் நிதித்திட்டமிடல் அமைச்சர் மர்ஹூம் அல்-ஹாஜ்.எம்.எச்.எம். நைனா மரைக்காரின் ஞாபகர்த்தமாக உருவாக்கப்பட்ட பெரிஸ்டர் நைனா மரைக்கார் பவுன்டேஷன் ஏற்பாடு செய்து நடத்திய மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா (2015.01.18) புத்தளம் நுஹ்மான் வரவேற்பு மண்டபத்தில் நேற்று இடம் பெற்றது.
-
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு நுளம்பு வலைகளை விநியோகிக்கும் நிகழ்வு
முஹம்மது பஹத் காத்தான்குடி: இலங்கை ஜமாஅதே இஸ்லாமி காத்தான்குடி மன்ற ஊழியர்களின் நிதிப் பங்களிப்புடன், அண்மைய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு நுளம்பு வலைகளை விநியோகிக்கும் நிகழ்வு இன்று (18-01-2015) மாலை காத்தான்குடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
-
கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் சுபைரின் ‘யோகட்’ மகிழ்ச்சி விழா
ஹாசிப் யாஸீன் ஏறாவூர்: நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று தனது கடமைகளை பொறுப்பெடுத்ததை அடுத்து கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் ஏறாவூர் பிரதேச மக்களுக்கு யோகட் பகிர்ந்தளித்து மகிழ்ச்சி விழாவினை நேற்று (17) கொண்டாடினார்.
-
பிலியந்தலவில் கைப்பற்றப்பட்ட லம்போர்கினி ஆடம்பரக் கார் யாருடையது?
கொழும்பு: பிலியந்தல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து பிரபலமான அரசியல்வாதியின் மகனுக்கு சொந்தமானது என கூறப்படும் லம்போர்கினி கார் ஒன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த வீட்டின் உரிமையாளர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர். அவரது புதல்வர் இராணுவத்திற்கு வாகனங்களை விநியோகித்து வருபவர் எனக் கூறப்படுகிறது.
-
சந்திரிகா வகுத்த வெற்றி வியூகமும் மறைந்துள்ள மஹிந்தவின் செல்வாக்குகளும்…
கொழும்பு: ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னரும், நானே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குத் தலைமை தாங்குவேன் என்று அதிகாரத் தொனியுடன் கூறி வந்த மஹிந்த ராஜபக்ச இப்போது, அதிலும் தோல்வி காணத் தொடங்கியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைப்பதற்கு மஹிந்த ராஜபக்ச முடிவு செய்திருப்பது அதனையே வெளிப்படுத்தியிருக்கிறது.
-
ஹூஸைனியா கிட்ஸ் கொலேஜில் 2015 ஆண்டில் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் கீழ் இயங்கிவரும் ஹூஸைனியா கிட்ஸ் கொலேஜில் 25வது வருடமாக புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி-01 ஐ.வை.எப். கல்வி மையத்தின் ஹூஸைனியா கிட்ஸ் கொலேஜில் இடம்பெற்றது.
-
முஅத்தீன்கள் சங்கத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய மட்டக்களப்பு, நொச்சிமுனை, பாலமுனை, காங்கேயனோடை ,ஒல்லிக்குளம், கீச்சான்பள்ளம்,சிகரம்,மண்முனை போன்ற பிரதேசங்களிலுள்ள பள்ளிவாயல்களில் இறை பணியாட்களாக பணியாற்றுகின்ற சுமார் 75 மேற்பட்ட முஅத்தீன்கள் அங்கத்தவர்களாக செயற்படும் முஅத்தீன்கள் சங்கத்தின் வருடாந்த பொதுச்
-
அரசாங்கத்துக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 113ஆக அதிகரித்துள்ளது
கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வகட்சி அரசாங்கத்துக்கு தற்பொழுது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ள நிலையில் அது தனது பெரும்பான்மையை நாளை மறுதினம் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடவுள்ள 2015ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் நிரூபிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
-
‘வடக்கைப் போல கிழக்கிலும் புதிய ஆளுநர் நியமனமாவார்’: சம்பந்தன்
யாழ்: வடக்கு மாகாணத்தில் இராணுவ பின்புலம் கொண்ட ஆளுநருக்குப் பதிலாக, மூத்த சிவில் அதிகாரியான பலிஹக்காரவை புதிய ஆளுநராக நியமிக்கும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கையை வடக்கில் ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
-
மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்துக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவையும் இல்லை
மத்தள: ஹம்பாந்தோட்டையில் மத்தளவில் உள்ள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கான விமான சேவைகளை முற்றாக நிறுத்தப்போவதாக நட்டத்தில் இயங்கிவரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷாவின் சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் மத்தள என்ற இடத்தில் கடந்த ஆட்சியின்போது திறக்கப்பட்டது.
-
ஹிஸ்புல்லாஹ்வின் காங்கேயனோடை ஆதரவாளர்களுக்கான விஷேட ஒன்று கூடல்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காங்கேயனோடை: காங்கேயனோடை பிரதேசத்தில் 2015 ஜனாதிபதி தேர்தலின் பிற்பாடு காங்கேயனோடை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களுக்கான விஷேட ஒன்று கூடல் நிகழ்வொன்று காங்கேயனோடை ஈரான் வீட்டுத்திட்ட மஸ்ஜிதுல் றசூல் பள்ளிவாயல் முன்றலில் இடம்பெற்றது.
-
கடந்த 9 வருட கொள்ளைப் பணங்களை தனது வைப்பிலிட்ட கோத்தபாய
கொழும்பு: முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த கோத்தபாய, பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பெருந்தொகை பணத்தை தனது கணக்குகளில் வைப்புச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தவிர வீடமைப்பு, காணி, ரக்னா லங்கா தனியார் பாதுகாப்பு சேவை போன்ற திட்டங்களுக்கு பொது மக்களின் பணத்தை செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.