காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் கீழ் இயங்கிவரும் ஹூஸைனியா கிட்ஸ் கொலேஜில் 25வது வருடமாக புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி-01 ஐ.வை.எப். கல்வி மையத்தின் ஹூஸைனியா கிட்ஸ் கொலேஜில் இடம்பெற்றது.
இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் பிரதித் தலைவர் எம்.ஐ.எம்.ஜவ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேற்படி முன்னணியின் உறுப்பினர்கள் உட்பட பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது ஹூஸைனியா கிட்ஸ் கொலேஜில் 2015 ஆண்டில் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.
Published by



Leave a comment