Category: Your Kattankudy
-
காத்தான்குடி பூர்வீக நூதனசாலையை பார்வையிட வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய தினங்களில் காலை 10 .00 மணி தொடக்கம் மாலை 06.00 மணி வரை பார்வையிட முடியும்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை முஸ்லிம்களின் சரித்திரம் மற்றும் அவர்கள் நாட்டிற்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்களை நினைவு கூறும் வகையில் மட்டக்களப்பு – கல்முனை காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் பூர்வீக நூதனசாலையை (மியூசியத்தை) பார்வையிட அதிகளவான மக்கள் அங்கு வருகை தருவதால் அதற்கான நேரம் விஷேடமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.
-
காத்தான்குடியில் வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் எனும் தெரனிப்பொருளில் நிகழ்வு
எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் எனும் தெரனிப்பொருளில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 3 பிரவுகளுக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று 167ஏ, 167பி மற்றும் 165 ஏ கிராம சேவகர் பிரிவுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
-
சரியாக 33 வருடங்களுக்குப் பின்னர (ஏப்ரல் 29) இன்றைய பொழுது எமக்காகவே விடிந்திருக்கின்றது..! இன்ஷா அல்லாஹ் நாளைய பொழுதும் நமக்காகவே விடியும் !!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டேயில் புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. என்றாலும் பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் அன்றைய ஜனாதிபதி ஜெ ஆர் ஜெயவர்த்தனாவின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பினால் பறிக்கப் பட்டிருந்தது.
-
KCDA யினால் அல்-ஹிதாயாவின் கணித, விஞ்ஞானப் பிரிவுகளுக்கான நிதி கையளிப்பு
KCDA மீராவோடை: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின், கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையான மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கணித, விஞ்ஞானப் பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நான்காம் கட்ட சிறு தொகை நிதி 2015.04.29 ஆந் திகதி புதன்கிழமை கையளிக்கப்பட்டது.
-
இந்தோனேசியாவுக்கான தூதரை திரும்ப அழைத்தது அவுஸ்திரேலியா
சிட்னி: இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக இரு அவுஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து, இந்தோனேசியாவுக்கான தூதரை அவுஸ்திரேலியா திரும்பப் பெற்றுள்ளது.இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமையன்று இரவில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட எட்டுப் பேரில் ஆண்ட்ரூ சான், மயூரன் சுகுமாரன் ஆகிய இருவரும் அவுஸ்திரேலியர்கள்.
-
முஜிபுர் ரஃமானின் தேசியக் கொடி சபந்தமான கோரிக்கை மேல் மாகாண சபையில் நிராகரிப்பு
– ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் கொழும்பு: இலங்கையில் இருக்கும் அரசியலமைப்பின் படி தேசியக் கொடியானது எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் இருக்கும் சில இனவாத அமைப்புக்கள் அவர்களுடைய அரசியல் நோக்கங்களுக்காகவும் மீண்டும் மஹிந்த ராஜபக்ஸ்ஸ இனவாத்தை தூண்டி ஆட்சியினை கைப்பற்றிக் கொள்ள முடியும் என்ற நோக்கின் அடிப்படையில் தேசியக் கொடியில் சிறுபான்மை
-
நேர்முகப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது
– எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: இலங்கை நிருவாக சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சை 2013 (2014) இல் தகுதிபெற்ற பரீட்சார்த்திகளுக்கான நேர்முகப் பரீட்சை தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக அரசாங்க நிருவாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே தெரிவித்துள்ளார்.
-
நபித்தோழர்களை கண்ணியப்படுத்துவோம் (வீடியோ)
வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம் அருகில், ஸனய்யியா, ஜித்தா, 17.04.2015 நன்றி: சுவனப்பாதை
-
ஜனாதிபதி – பிரதமர் அர்ப்பணிப்பு: 19 ஆவது திருத்தம் சபையில் நிறைவேற்றம்
ஆதரவு- 212, எதிர் -01, நடுநிலை – 01, சமுகமளிக்காதோர் – 10 கொழும்பு: நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பான அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
-
“19வது சட்டத்திருத்தம் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை”
கொழும்பு: இலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரண்டு பதவிக்காலங்கள் என்று மீண்டும் குறைத்தது, மற்றும் தகவல் அறியும் உரிமை என்ற இரு விஷயங்களைத் தவிர, 19வது சட்டத்திருத்தத்தின் மூலம் மைத்திரிபால சிறிசேன பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்கிறார் சட்ட ஆய்வாளர் குமாரவடிவேல் குருபரன்.
-
இந்தோனேஷியா: அவுஸ்திரேலிய இலங்கையர் இருவர் உட்பட எட்டுபேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
ஜகார்த்தா: இந்தோனேஷிய நீதிமன்றத்தால் போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின்பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்ட எட்டுபேரின் மரணதண்டனையும் செவ்வாய்க்கிழமை இரவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும்படி சர்வதேச அளவில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் மீறி, மத்திய ஜாவா தீவில் இருக்கும் சிறைக்குள் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்கு பிறகு (புதன்கிழமை துவங்கிய சமயம்) இவர்களின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
-
நேபாளத்துக்கு உதவும் முஸ்லிம்களின் கூட்டமைப்பு உதயம்
ஹிஸ்புல்லாஹ் இப்ராஹிம் கொழும்பு: நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நேபாளம் நாட்டிற்கு உதவி செய்யும் முகமாக, இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து ‘ஹெல்பிங் நேபால் ஸ்ரீலங்கன் முஸ்லிம் போரம்’ என்ற பெயரில் அமைப்புக்களுக்கிடையிலான வலையமைப்போன்றை உருவாக்கியுள்ளன.