கொழும்பு: இலங்கை நிருவாக சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சை 2013 (2014) இல் தகுதிபெற்ற பரீட்சார்த்திகளுக்கான நேர்முகப் பரீட்சை தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக அரசாங்க நிருவாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே தெரிவித்துள்ளார்.
தனது 2015.04.24ஆந் திகதிய கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது மே மாதம் 1 மற்றும் 2ஆம் திகதிகளில் மேற்குறிப்பிட்ட நேர்முகப் பரீட்சை இரத்துச் செய்ய வேண்டியுள்ளது. அதனால் அத் தினங்களில் அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரிகள் ஒழுங்கு வரிசைப்படி மே மாதம் 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் அழைக்கப்பட்டுள்ளதாக அறியத்தருகின்றோம் எனவும் இது தொடர்பாக அவ் விண்ணப்பதாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும் எனவும் செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Published by

Leave a comment