Category: Your Kattankudy
-
38 நாள் பெண் குழந்தை தாய்ப்பால் புரைக்கேறி மரணம் – செங்கலடியில் சம்பவம்
– ஏறாவூர் அபூ பயாஸ் மட்டக்களப்பு: ஏறாவூர் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட வாசிகசாலை வீதி,கொம்மாதுரை ,செங்கலடி எனும் பிரதேசத்தை சேர்ந்த உதயகுமார் விதுஷினி என்ற பெண் குழந்தை , பிறந்து 38 வது நாள் (23-05-2015) அதிகாலை 04.00 மணியளவில் தனது தாயிடம் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருக்கும்போது புரைக்கேறியதால் மயக்கமடைந்த குழந்தையை அருகிலுள்ள செங்கலடி வைதியசாலைக்கு கொண்டுசென்றபோது குழந்தை மரணமடைந்துவிட்ட துயரச் செய்தியை பெற்றோர் அறிந்துள்ளனர்.
-
ஷஃபான் மாத சிறப்புகளும் பித்அத்களும் (வீடியோ)
வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 17.05.2015 (ஞாயிற்றுக்கிழமை) (நன்றி: சுவனப்பாதை)
-
மாகாண சபைகளில் பெண்களுக்கு 30 வீதம் ஒதுக்கீடு
கொழும்பு: மாகாணசபைகளில் பெண்களுக்கு 30 சத வீத இட ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்த தீர்மானத்தின்படி மாகாண சபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் நாடாளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் உள்ளுராட்சி சபைகளிலும் பெண்களுக்கு பிரதிநிதித்தும் இருந்தாலும் அது போதாது.
-
65 வயதில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்
பேர்லின்: ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளைப் பிரசவித்துள்ளார். அன்கிரிட் ரொவ்னிக் என்ற அந்தப் பெண்மணி குறை மாதத்தில் அதாவது கருவுற்ற 26 வாரங்களிலேயே 3 ஆண் குழந்தைகளையும், ஒரு பெண் குழந்தையையும் பெற்றேடுத்துள்ளதாக ஜெர்மனிய தொலைக் காட்சி நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
2015.05.20 ஆம் திகதி புதன்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடாத்தப்பட்ட விஷேட மாநாட்டுத் தீர்மானங்கள்
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கடந்த சில காலமாக அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் தூய அகீதாவுக்கெதிரான பல சிந்தனைகள் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குள் பரவி வருவதை அவதானித்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நம்பிக்கைக் கோட்பாடுகளை பறைசாற்றும் முகமாகவும் அவர்களின் கொள்கைகளுக்கு எதிரான சிந்தனைகளை
-
முஸ்லிம்களை ஏன் விரட்டுகின்றோம்??? – உலக மகா தீவிர வாதி அசின் விராதுவின் அதிரடிப் பேட்டி
SL Youth Network “இன்று பர்மாவில் முஸ்லிம்கள் விரட்டப் படுவதன் அடிப்படை காரணம் இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களே” என்பதை இந்த காணொளி மூலம் விளங்க முடிகின்றது.
-
வில்பத்து விவகாரம் முழுமையான அரசியல் இலாபநோக்கிலே சிலரால் கையாளப்படுகின்றது: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் தெரிவிப்பு
NFGG ஊடகப்பிரிவு வில்பத்து: வில்பத்து விடயமாக வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சி உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன் பிரேரணை ஒன்றினை முன்மொழிந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் குறுக்கீடு செய்ததாக வடக்கு மாகாணசபையின் மற்றுமொரு எதிர்கட்சி உறுப்பினர் ஜவாஹிர் அவர்கள் ஊடகங்களிலே கருத்து வெளியிட்டுள்ளார்.
-
பெரியமடு கிராம மீள்குடியேற்றம் தொடர்பான பிரேரணை
NFGG ஊடகப்பிரிவு மன்னார்: 21.05.2015 அன்று வடக்கு மாகாணசபையின் 29வது அமர்வின்போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. அ.அஸ்மின் அவர்கள் முன்வைத்த பெரியமடு கிராம மீள்குடியேற்றம் தொடர்பான பிரேரணை மற்றும் அதன் பின்னணி விளக்கம்.
-
வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. அ. அஸ்மின் அவர்கள் முன்வைத்த தெருவோர வியாபாரிகள் தொடர்பான பிரேரணை
NFGG ஊடகப்பிரிவு வவுனியா: 21.05.2015 அன்று வடக்கு மாகாணசபையின் 29வது அமர்வின்போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. அ. அஸ்மின் அவர்கள் முன்வைத்த தெருவோர வியாபாரிகள் தொடர்பான பிரேரணை மற்றும் அதன் பின்னணி விளக்கம்.
-
மறிச்சுக்கட்டி – வில்பத்து தொடர்பாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. அ. அஸ்மின் அவர்கள் முன்வைத்த பிரேரணை
ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மறிச்சுக்கட்டி: 21.05.2015 அன்று வடக்கு மாகாணசபையின் 29வது அமர்வின்போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. அ.அஸ்மின் அவர்கள் முன்வைத்த மறிச்சுக்கட்டி- வில்பத்து தொடர்பான பிரேரணை மற்றும் அதன் பின்னணி விளக்கம்.
-
ரிசாத் பதியுதீன் பங்கு பற்றிய பலய விவாதம் ஞாயிறு காலை 11.30க்கு மீள் ஒளிபரப்பு
பூமுதீன் வில்பத்து: வில்பத்து விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் பங்கொண்ட ஹிரு தொலைக்காட்டியின் பலய நிகழ்வு நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 11.30 க்கு மீள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
-
யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தடை
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்களை நடாத்த, யாழ் மாவட்ட நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் சில அமைப்புக்கள் போராட்டங்களையோ ஆர்ப்பாட்டங்களையோ நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.