வில்பத்து: வில்பத்து விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் பங்கொண்ட ஹிரு தொலைக்காட்டியின் பலய நிகழ்வு நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 11.30 க்கு மீள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
துணிச்சலுடன் ஆதாரபூர்வமாக வில்பத்து தொடர்பான பிரச்சினைக்கு ஆக்கபூர்வமாக பதிலளித்த அந்த விறுவிறுப்பான ஹிரு பலய நிகழ்ச்சி இன்று சிங்கள தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் தெளிவையும் அமைச்சர் ரிசாதின் சமுகத்தின் மீதான அக்கறையும் தெளிவாக எடுத்துக் காட்டியிருந்தது.
வில்பத்து தொடர்பில் சிங்கள சமுகம் கொண்டிருந்த ஐயப்பாட்டுக்கு அமைச்சர் ரிசாதின் அன்றைய விவாதம் பெருமளவில் தெளிவை ஏற்படுத்தியிருந்தது.
இது சிங்கள முஸ்லிம் சமுகங்களிடைய தோற்றுவிக்கப்படவிருந்த பெரும் முரண்பாட்டுக்கு அமைச்சர் ரிசாதின் சாணக்கியமான விளக்கங்கள் முற்றுப்புள்ளி வைத்ததாக அமைந்திருந்தது.
ஹிரு தொலைக்காட்சியில் ரிசாத் பதியுதீன் வழங்கிய விளக்கங்கள் ஆதாரபூர்வமான தகவல்கள் அதன் போது அவர் வெளிப்படுத்திய எளிமையும் பக்குவமும் கடந்த இரு தினங்களாக இலங்கை அரசியல் வாதிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை ஈட்டுக் கொடுத்துள்ளது.
இந்த ரீதியில் ஹிரு பலய விவாத மேடை நாளை காலை 11.30க்கு மணிக்கு மீள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
Published by

Leave a comment