38 நாள் பெண் குழந்தை தாய்ப்பால் புரைக்கேறி மரணம் – செங்கலடியில் சம்பவம்

baby death– ஏறாவூர் அபூ பயாஸ்

மட்டக்களப்பு: ஏறாவூர் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட வாசிகசாலை வீதி,கொம்மாதுரை ,செங்கலடி எனும் பிரதேசத்தை சேர்ந்த உதயகுமார் விதுஷினி என்ற பெண் குழந்தை , பிறந்து 38 வது நாள் (23-05-2015) அதிகாலை 04.00 மணியளவில் தனது தாயிடம் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருக்கும்போது புரைக்கேறியதால் மயக்கமடைந்த குழந்தையை அருகிலுள்ள செங்கலடி வைதியசாலைக்கு கொண்டுசென்றபோது குழந்தை மரணமடைந்துவிட்ட துயரச் செய்தியை பெற்றோர் அறிந்துள்ளனர்.

ஏற்கனவே 8 வயதிலும், 4 வயதிலும் இரு ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக இப் பெண் குழந்தை சென்ற 15-04-2015 யில் செங்கலடி வைத்தியசாலையில் சுகப் பிரசவமாக பிறந்துள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அவர்களின் உத்தரவுக்கு அமைய ஏறாவூர் பொலிசாருடன் சம்பவ இடத்துக்கு சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் அவர்கள் மரண விசாரணையை மேற்கொண்டார்கள்.

பிரேதப்பரிசோதனையின் பின்னர் ” தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தைக்கு புரைக்கேறியதால் சுவாசம் தடைப்பட்டு இதயம் செயலிழந்து மரணம் சம்பவித்துள்ளது ” என்ற தீர்ப்புடன் குழந்தையின் பிரேதத்தை பெற்றோரிடம் ஒப்படைக்க ஏறாவூர் பொலிசாரை மரண விசாரணை அதிகாரி பணித்தார்.

baby death

Published by

Leave a comment