பேர்லின்: ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளைப் பிரசவித்துள்ளார். அன்கிரிட் ரொவ்னிக் என்ற அந்தப் பெண்மணி குறை மாதத்தில் அதாவது கருவுற்ற 26 வாரங்களிலேயே 3 ஆண் குழந்தைகளையும், ஒரு பெண் குழந்தையையும் பெற்றேடுத்துள்ளதாக ஜெர்மனிய தொலைக் காட்சி நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே ரொவ்னிக் அவர்களுக்கு 9 முதல் 44 வரையுள்ள 13 குழந்தைகள் இருக்கின்றனர். ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த மிகவும் வயதான பெண் இவர்தான் என்று கருதப்படுகிறது. தனது இளைய மகள் விளையாடுவதற்கு தனக்கு தங்கையோ, தம்பியோ வேண்டும் என்று கேட்டதன் காரணமாக மேலும் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடிவெடுத்ததாக அன்கிரிட் தெரிவித்துள்ளார்.
பிள்ளையைப் பெறுவதற்காக அவர் யுக்ரெய்ன் நாட்டுக்குச் சென்று சிகிச்சை எடுத்துள்ளார். ஆனால் இந்த சிகிச்சை முறை ஜெர்மனியில் தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் குறைமாதத்திலே பிறந்தாலும், அவர்கள் தப்பித்துக் கொள்ள நல்ல வாயப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.
Published by


Leave a comment