மியன்மாரில் முஸ்லிம்களுக்கெதிராக நடாத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து ஏறாவூரில் நேற்று ஆர்ப்பாட்டம்

unnamedஎம்.எஸ்.எம்.ஸப்றாஸ்

ஏறாவூர்: உயிரியல் உரிமைகளுக்கான எல்லையற்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். ஏறாவூர் முகைதீன் ஜும் ஆப்பள்ளிவாயல் முன்றலிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் ஏறாவூர் நகர சபை முன்றலில் முடிவுற்றது.

இவ்வார்ப்பாட்டத்தில் நகர சபையின் முன்னால் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் பிரசன்னமாயிருந்தனர். இதன் போது  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பாராளுமன்ற உருப்பினருமான பஷீர் சேகுதாவூத் கருத்துத் தெரிவிக்கையில்,

நல்லாட்சி எனும் எமது அரசே மியன்மார் அரசை உடனடியாக கண்டனம் செய்யவேண்டும். இந்த பிரச்சினை மியன்னாரில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு மாத்திரம் ஏற்பட்டுள்ள பிரச்சினையல்ல. உலகம் முழுவதிலும் வாழுகின்ற எல்லா இனங்களிலும் சிறுபாண்மைகளாக வாழுகின்ற மக்களுகெதிரான பிரச்சினையாக அடையாளம் காணவேண்டுமெனவும் அவர் கூறினார்.      

unnamed

unnamed1

Published by

Leave a comment