ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகேயின் பங்குபற்றலுடன் கர்பலா வீதி புனரமைப்பு வேலைகள் நேற்று ஆரம்பம்!

karbala road– புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், எம்.எச்.எம். அன்வர்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்திலுள்ள புதிய காத்தான்குடியையும், மண்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள பாலமுனையையும் இணைக்கும் உள்ளக பிரதான வீதியான ‘கர்பலா வீதி’யை சுமார் 24 வருடங்களுக்குப் பின்னர் 50 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யும் வேலைத்திட்டம்  (26.06.2015) வெள்ளிக்கிழமை மாலை பாலமுனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதேச ஐ.தே.கட்சி அமைப்பாளர் அல்ஹாஜ் எச்.எம்.எம். முஸ்தபாவின் வேண்டுகோளுக்கமைய அமைச்சரும், ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளருமான அல்ஹாஜ் கபீர் ஹாஸிம் அவர்களினால் நிதியொதுக்கீடு செய்யப்பட்ட இந்த வீதிப் புனரமைப்பு வேலைத்திட்டத்தினை கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயாகமகே ஆரம்பித்து வைத்தார்.

karbala road daya gamage

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் தர்மரெத்தினம், மட்டக்களப்பு பிராந்திய பிரதம பொறியியலாளர் பத்மராஜா, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் உள்ளிட்ட ஊர்ப்பிரமுகர்கள், உலமாக்கள், வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

unp karbala road

Published by

Leave a comment