Category: Your Kattankudy
-
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடவுச்சீட்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிறுவனமாக காத்தான்குடி அல்-இனாறா மெனேஜ்மன்ட் நிறுவனம் தெரிவு
காத்தான்குடி: இலங்கை குடி வரவு,குடியகல்வு திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடவுச்சீட்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிறுவனமாக காத்தான்குடி பிரதான வீதி இலக்கம் 357லுள்ள அல்-இனாறா மெனேஜ்மன்ட் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அல்-இனாறா மெனேஜ்மன்ட் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஏ.கே.பலீலுர் ரஹ்மான்(JP) தெரிவித்தார்.
-
அஷ் ஷெய்க் யூசுப் முப்தியின் காத்தான்குடியில் இடம்பெற்ற ஜும்ஆ பயானின் ஒலிப்பதிவு
– ஆஸிர் நஸீர் உரை – அஷ் ஷெய்க் யூசுப் ஹனீபா முப்தி (பின்னூரி) இடம் – முஹ்யித்தீன் மெத்தை பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல், காத்தான்குடி – 03 தலைப்பு – “இப்ராஹீம் (அலை) காட்டித்தந்த குடும்பவாழ்வு” காலம் – 25.09.2015 வெள்ளிக்கிழமை
-
சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக காத்தான்குடியில் விழிப்புணர்வு ஊர்வலம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பிள்ளைகளை உயிர் போல் காப்போம் எனும் தொனிப்பொருளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், ஸ்ரீலங்கா இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து நாடாளாவிய ரீதியில் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
-
காத்தான்குடியில் கடல் அரிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி- ஏத்துக்கால் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு காரணமாக அப்பகுதியில் மலசலகூடம் அமைப்பதற்காக இடப்பட்டிருந்த அத்திவாரம் நேற்று 29 செவ்வாய்க்கிழமை இரவு உடைந்துள்ளது.
-
மதத்தின் பெயரால் எற்படக்கூடிய மோதல்கள் விலகி ஜாதி மதம் இல்லாத ஒரு சகோதரத்துவம் ஏற்படும்- பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 02.10.2015 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணிவரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் மாமறைக்கு ஒரு மாநாடு எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள மாநாடு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு காத்தான்குடியிலுள்ள தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் தலைமை காரியாலயத்தில் நேற்று (29.09.2015) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.
-
காத்தான்குடியில் ‘முத்தான வியர்வை 2015’ எனும் தொனிப்பொருளில் கண்காட்சியும் விற்பனையும்
நமது நிருபர் காத்தான்குடி: வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் ‘முத்தான வியர்வை 2015’ எனும் தொனிப்பொருளில் கண்காட்சியும் விற்பனையும் நேற்று (29) காத்தான்குடி அட்வகேட் அப்துல் காதர் வீதியிலுள்ள திவினெகும வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிச்சங்கத்தில் இடம்பெற்றது.
-
பொத்துவில் காணிகளை விடுவிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை
ஹாசிப் யாஸீன் அம்பாறை: விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்கும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ.வணிகசிங்கவுக்குமிடையேயான சந்திப்பு நேற்று (28) திங்கட்கிழமை அம்பாறை கச்சேரியில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது பிரதி அமைச்சர் ஹரீஸ் மருதமுனையிலுள்ள மோட்டுவட்டை சுனாமி வீட்டுத்திட்டத்திலுள்ள 81 வீடுகளை பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்கு உடன் வழங்குவதற்கு முறையான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபரைப் கேட்டுக் கொண்டார்.
-
சிறுநீரக மாற்று சத்திர சிகிட்சைக்காக நிதியுதவி கோரல்
கற்பிட்டி: கற்பிட்டி மேட்டுதெருவில் வசிக்கும் சகோதரர் N. Jamsy அவர்கள் அன்மைக்காலமாக அவரது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட்ட நிலையில் சிகிச்ச்கிபெற்று வருகிறார். இவரது இரு சிறுநீரகங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையால், உடனடி சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் சிபாரிசு செய்துள்ளனர்.
-
நீர்வெறுப்பு நோய் விழிப்புணர்வு கருத்தரங்கு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உலகளாவிய ரீதியில் செப்டெம்பர் மாதம் 28ம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக நீர் வெறுப்பு நோய் (விசர்நாய்க்கடி நோய் –Rabies தினத்தை சிறப்பிக்கும் முகமாக காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான உலக நீர் வெறுப்பு நோய் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று 28-09-2015 நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
-
என்னையும் என் குடும்பத்தினரையும் கடந்த ஆட்சியாளர்களுடன் ஒப்பிட வேண்டாம்
கொழும்பு: என்னையும் என் குடும்பத்தினரையும் கடந்த ஆட்சியாளர்களுடன் ஒப்பிட வேண்டாம் என ஜனாதிபதியின் மகன் தஹாம் சிறிசேன தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமர்வுக்காக ஜனாதிபதியுடன் தஹாம் சிறிசேனவும் சென்றுqள்ளார். இதனால் கடந்த ஆட்சியில் மஹிந்த ராஜபக்ஷ தனது புதல்வர்களை பிரசித்தப்படுத்தியது போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது மகனை பிரசித்தம் படுத்துகின்றார் எனவும் தற்போதும் குடும்ப ஆட்சி இடம்பெறுகின்றது எனவும் ஊடகங்கள் விமர்சனம் செய்திருந்தன.
-
சர்வதேச மற்றும் உள்ளக பொறிமுறையில் முஸ்லிம்களது விவகாரம் முறையாக உள்வாங்கப்படல் வேண்டும்
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் இந்த நாட்டின் நிலையான சமாதானமும், ஸ்திரப்பாடும், அரசியல் தீர்வும், அபிவிருத்தியும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை போருக்குப் பின்னரான இலங்கையில் அர்த்தமுள்ள விதத்தில் கட்டி எழுப்புவதிலேயே தங்கியுள்ளது என அண்மையில் இராணுவ வெற்றி குறித்த ஞாபகார்த்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி வலியுறுத்தினார்.
-
மின்சார விநியோக தடைக்கான காரணம்
கொழும்பு: நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிறு இரவு திடீர் என மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட தடை குறித்து, மின்சாரத்துறை அமைச்சு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. இதன்படி, முன்னெப்போதும் இல்லாத வகையில், நேற்று இரவு மின்சார நுகர்வில் ஏற்பட்ட பாரிய குறைவே மின்சார தடைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.