கொழும்பு: நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிறு இரவு திடீர் என மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட தடை குறித்து, மின்சாரத்துறை அமைச்சு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. இதன்படி, முன்னெப்போதும் இல்லாத வகையில், நேற்று இரவு மின்சார நுகர்வில் ஏற்பட்ட பாரிய குறைவே மின்சார தடைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமையாக இரவு வேளைகளில் 1,100 மெகா வாட்ஸ் மின்சார பாவனை நாடளாவிய ரீதியாக பயன்படுத்தப்படுகின்றது. எனினும், நேற்று குளிர் நிறைந்த காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் தொளாயிரத்து 40 மெகா வாட்ஸ் மின்சாரமே பயன்படுத்தப்பட்டது.
இதனால், மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டதாக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment