நீர்வெறுப்பு நோய் விழிப்புணர்வு கருத்தரங்கு

seminar nasrudeen– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: உலகளாவிய ரீதியில் செப்டெம்பர் மாதம் 28ம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக நீர் வெறுப்பு நோய் (விசர்நாய்க்கடி நோய் –Rabies தினத்தை சிறப்பிக்கும் முகமாக காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான உலக நீர் வெறுப்பு நோய் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று 28-09-2015 நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

அந்நாஸர் வித்தியாலய அதிபர் எம்.ஏ.அல்லாப்பிச்சை தலைமையில் இடம்பெற்ற மேற்படி கருத்தரங்கில் காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி.டுஜித்திரா லிங்கேஸ்வரன் விஷேட அதிதியாக கலந்து கொண்டு விசர்நாய்க்கடி நோய் தொடர்பில் கருத்துரை வழங்கியதோடு ,காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீன் அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

seminar nasrudeen

இவ் விழிப்புணர்வு கருத்தரங்கில் நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் காத்தான்குடி பிரதேச சுகாதார பரிசோதகர்களும் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment