காத்தான்குடி: இலங்கை குடி வரவு,குடியகல்வு திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடவுச்சீட்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிறுவனமாக காத்தான்குடி பிரதான வீதி இலக்கம் 357லுள்ள அல்-இனாறா மெனேஜ்மன்ட் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அல்-இனாறா மெனேஜ்மன்ட் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஏ.கே.பலீலுர் ரஹ்மான்(JP) தெரிவித்தார்.
இலங்கை குடி வரவு,குடியகல்வு திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை இலங்கை குடி வரவு,குடியகல்வு திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிறுவனமொன்றின் மூலமே வழங்கமுடியும்.
அதற்கான அங்கீகாரத்தை காத்தான்குடியிலுள்ள மேற்படி அல்-இனாறா மெனேஜ்மன்ட் நிறுவனத்திற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் வழங்கியுள்ளதாக எஸ்.ஏ.கே.பலீலுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.
மேலதிக தொடர்புகளுக்கு:
TP 0652246110, 065 2247898
(நமது நிருபர்)
Published by


Leave a comment