Category: Your Kattankudy
-
வெளிநாட்டில் சம்பாதிக்கும் வருமானத்திற்கு வரி விலக்கு
கொழும்பு: புதிய அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதார கொள்கைத் திட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. மூன்றாவது பரம்பரையை இலக்குவைத்ததாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் ஊடாக கடந்த ஆட்சியினால் வீழ்ச்சியடைந்த எமது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் நாட்டை முன்னேற்றவும் அவசியமான பல வேலைத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
-
புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் செயலாளராக திருமதி. சாந்திநாவுக்கரசன் நியமனம்
கொழும்பு: புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் செயலாளராக திருமதி. சாந்தி நாவுக்கரசன் நியமனம் செய்யப்பபட்டுள்ளார். இலங்கை நிர்வாக சேவையில் விசேட தரத்தினுடைய இவர் ஊர்காவற்துறை, சண்டிலிப்பாய், யாழ்பாணம் ஆகிய பிரதேசங்களில் உதவி அரசாங்க அதிபராகவும், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளர் மற்றும் பணிப்பாளர் பதவிகளிலும்.
-
பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது தடை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர். துஷார திலங்க ஜெயலால் தெரிவித்தார்.
-
பி.ஜே வருகையும், கருத்துக்களும், கவலைகளும்
ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்தின் ஸ்தாபகர் மௌலவி ஜெய்னுலாப்தீன் அவர்களது இலங்கை வருகை குறித்து ஊடகங்களில் பூதாகரமாக வெளியிடப்படுகின்ற ஆதரவானதும் எதிரானதுமான வாதப் பிரதிவாதங்கள் கவலை தருகின்றது. தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடுகள் இல்லாவிட்டாலும் சர்வதேச அளவில் அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள் மத்தியில் நிலவுகின்ற கருத்து வேறுபாடுகள் போன்றே அவரது சில நிலைப்பாடுகளையும் நான் காண்கின்றேன், அவரது சில கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்ட திரிபுகளுக்கும் உள்ளாகியுள்ளன.
-
கவனயீனத்தால் கரைந்துபோன பிஞ்சுஉயிர்! தண்ணீர் விழுங்கிய குழந்தையின் கண்ணீர் கதை!
எம்.எஸ்.எம். நூர்தீன் காத்தான்குடி: கடந்த (30.10.2015) வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி 6ம்குறிச்சி பாவா வீதியில் சிறுமியொருவரை காணவில்லை என்ற பரபரப்பான செய்தி அந்தப்பிரதேசமெங்கும் மிக வேகமாக பரவியது. இந்தச் செய்தி வெளியாகி ஒரு சில மணித்தியாலயங்களில் காணாமல் போன குறித்த சிறுமி மலசல கூடம் நிர்மாணிப்பதற்காக வெட்டப்பட்ட குழியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டதாகவும் சிறுமி உயிரிழந்து விட்டதாகவும் தெரிய வந்தது.
-
பி.ஜே வந்தால் உன் மூளை கொதிப்பது ஏன்…?
இர்ஷாட் ஏ. காதர் காத்தான்குடி: தமிழக மார்க்க அறிஞர் பி. ஜெய்னுலாப்தீன் இலங்கை வருகையை கருத்திற்கொண்டு, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஓர் துண்டுப்பிரசுரத்தை அதிரடியாக வெளியிட்டு சாதித்துக்காட்டியிருக்கிறது. “கடந்த காலங்களில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள்” என்று, அசம்பாவிதங்களைத் தூண்டிவிட்ட இந்த இயக்கமே இப்போது துண்டொன்றை வீசிவிட்டிருக்கிறது வேடிக்கை.
-
ரஷ்ய விமான விபத்தும் எழும் யூகங்களும்
மொஸ்கோ: எகிப்திலிருந்து புறப்பட்ட ரஷ்ய விமானம் ஒன்று சினாய் பகுதியில் விழுந்து நொறுங்கி அதிலிருந்த மொத்தம் 224 பேரும்உயிரிழந்தாலும், அந்த அசம்பாவிதம் ஏன் ஏற்பட்டது என்பதற்கு இதுவரை தெளிவான காரணம் ஏதும் வெளியாகவில்லை. ஆனால் விமானம் எப்படி நொறுங்கி விழுந்தது என்பது குறித்து பலவகையாக யூகங்களும், கருத்துக்களும் வந்துள்ளன.
-
பீ ஜே வருகிறார்! ஒடுக்க நினைப்பது புத்தி “சாலி”த் தனமல்ல
பா ஜ ஆளும் பாரதம் இருந்து பீ ஜே வருகிறார் பிரச்சாரம் பண்ண கூச்சல் போடுறார் கொஞ்சப் பேருக்கு காய்ச்சல் அடிக்குது
-
காத்தான்குடியில் கால்நடைகளுக்கான இலவச நடமாடும் வைத்திய முகாம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கால்நடைகளுக்கான இலவச நடமாடும் வைத்திய முகாம் 95) வியாழக்கிழமை காத்தான்குடி-05 மஸ்ஜிதுல் குபா ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
-
நாவற்குடாவில் பஸ்-டிப்பர் விபத்து
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் இலங்கை போக்குவரத்து சபையின் களுவாஞ்சிக்குடி டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி விபத்து (04) புதன்கிழமை நன்பகல் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-கல்முனை நாவற்குடா பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
-
காத்தான்குடி வைத்தியசாலை விடயம்: காத்தான்குடி மீடியா போரம் சம்மேளனத்திடம் ஆவணம் கையளிப்பு
காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போர உறுப்பினர்கள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதிநிதிகளை சந்தித்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் மற்றும் வளப்பற்றாக்குறை தொடர்பாக 05.11.2015 வியாழக்கிழமை ஆவணம் கையளித்தனர்.
-
அம்பாறை மாவட்டத்தில் தொழிற் பயிற்சி: இளைஞர், யுவதிகளிடமிருந்து விண்ணப்பம் கோரல்
சப்னி அம்பாறை: தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி நெறிகளை தொடர்வதற்காக இளைஞர், யுவதிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ் மொழி மூலத்தில் இயங்கும் 11 பயிற்சி நிலையங்களுக்கு இப்போது விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக நிந்தவூரில் உள்ள மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.