நாவற்குடாவில் பஸ்-டிப்பர் விபத்து

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

tipper accidentகாத்தான்குடி: மட்டக்களப்பில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் இலங்கை போக்குவரத்து சபையின் களுவாஞ்சிக்குடி டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி விபத்து  (04) புதன்கிழமை நன்பகல் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-கல்முனை நாவற்குடா பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் டிப்பர் வாகனத்திற்கும் ,பஸ்ஸூக்கும், வீதிக்கும் தேசம் ஏற்பட்டுள்ளது.

tipper accident

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது.

டிப்பர் வாகனம் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

bus

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு இவ் விபத்துக்கு காரணமாக இருந்த டிப்பர் வாகன சாரதியிடம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதியை சேதப்படுத்தியமைக்காக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 12000 ரூபாவும், இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்ஸை சேதப்படுத்தியமைக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு 2500 ரூபாவும் பெற்றுக்கொடுக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.துஷார ஜெயலால் தெரிவித்தார்.

tipper

Published by

Leave a comment